Published:Updated:

`நிர்பயா குற்றவாளிகள் ஒண்ணும் தீவிரவாதிகள் இல்லை!’ - வழக்கறிஞர் ஏ.பி.சிங் வைக்கும் வாதம்

நிர்பயா வழக்கு
நிர்பயா வழக்கு

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20 ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

`விடியலை நோக்கிக் காத்திருக்கிறோம்’ என்கிறார் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி. நிர்பயா வழக்கில் மார்ச் 20-ம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது டெல்லி நீதிமன்றம். இன்னும் எத்தனை முறை குற்றவாளிகளைத் தூக்கிலிடுவீர்கள் என வாதாடுகிறார் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நால்வரின் வழக்கறிஞர். என்னதான் நடக்கிறது நிர்பயா வழக்கில்.

Representation Image
Representation Image

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கு 2020 ஜனவரியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் சட்ட உதவிகளை நாடியதால் தண்டனை நிறைவேற்றுதில் தாமதம் ஏற்பட்டது. மூன்று முறை தண்டனைத் தேதி மாற்றியமைக்கப்பட்டது. நான்கு குற்றவாளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்றுமுன் தினம் நிராகரித்தார்.

`தீயுடன் விளையாடுகிறீர்கள்; மீண்டும் நிறுத்தப்பட்ட தூக்கு!’ - நிர்பயா வழக்கில் என்ன நடக்கிறது?

இதையடுத்து நான்கு பேரையும், துாக்கிலிடுவதற்கான புதிய தேதி கேட்டு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், திகார் சிறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் நான்கு பேரையும் மார்ச் 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்குத் தூக்கிலிடவேண்டும் என உத்தரவிட்டது. மூன்று முறை தீர்ப்பு தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாகப் புதிய தேதியை அறிவித்துள்ளது நீதிமன்றம்.

ஆஷா தேவி
ஆஷா தேவி
ANI

இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள நிர்பயாவின் தாயார், ``மார்ச் 20-ம் தேதி நாங்கள் புதிய விடியலை எதிர்நோக்கியுள்ளோம் என்றார்.

இந்தத் தீர்ப்பு குறித்து பேசியுள்ள குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங், ``ஊடகங்களின் அழுத்தம் அவர்களை ஏற்கெனவே கொலை செய்துவிட்டது. 4 முறை தூக்குத் தண்டனை தேதி அறிவிக்கப்பட்ட,போதே அவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். மூன்று முறை தூக்கிலிடப்பட்டுவிட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் இல்லை. இது நீதித்துறையின் கொலை” என்றார்.

ஏ.பி.சிங்
ஏ.பி.சிங்

கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணையின் போது,`நீங்கள் தீயுடன் விளையாடுகிறீர்கள், ஜாக்கிரதையாக இருங்கள்' என பவன் குப்தாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங்கை நீதிபதி எச்சரித்தார். இதுகுறித்து பேசியுள்ள ஏ.பி.சிங், நான் நெருப்புடன் விளையாடுகிறேன் என்று நீதிமன்றம் கூறுகிறது. நான் அச்சுறுத்தப்படுகிறேன், துன்புறுத்தப்படுகிறேன் என்றுதானே அர்த்தம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு