Published:Updated:

`தெலுங்கு டப் படம் ரெஃபரென்ஸ்; சம்பளம் கொடுக்காததால் சிக்கல்!' -சினிமா பாணியில் அதிரவைத்த கொலை

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

`ஸ்ரீனிவாஸின் கட்டட கம்பெனியில் நாகராஜு கொத்தனாராகக் கடந்த 8 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்தார். அதேபோல் நாகேஷும் சில வருடங்களாகவே ஸ்ரீனிவாஸிடம் டிரைவராக வேலை பார்த்து இருக்கிறார்.'

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் சிட்டி அருகே உள்ள ஆர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். பில்டிங் கான்ட்ராக்டர் ஆன இவரது குழந்தைகள் வெளியூரில் படிப்பதால், தனது மனைவி வரலட்சுமியுடன் நிஜாமாபாத்தில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, சமீபத்தில் ஸ்ரீனிவாஸ் வெளியே சென்று வீடு திரும்பும்போது வீட்டில் வரலட்சுமி கழுத்தறுக்கப்பட்டு கால்விரல்கள் துண்டாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைப் பார்த்துப் பதறிய அவர், உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

பின்னர் 24 மணிநேரத்தில் ஸ்ரீனிவாஸின் கட்டட கம்பெனியில் வேலைபார்த்த கொத்தனார் பசுலேடி நாகராஜு (23) என்பவரையும் டிரைவராகப் பணிபுரிந்த நாகேஷ் குமார் (26) என்பவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாகப் பேட்டியளித்த நிஜாமாபாத் கமிஷனர் கார்த்திகேயா, கொலையாளிகள் குறித்து அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்தார். ``ஸ்ரீனிவாஸின் கட்டட கம்பெனியில் நாகராஜு கொத்தனாராக கடந்த 8 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்தார். அதேபோல் நாகேஷும் சில வருடங்களாகவே ஸ்ரீனிவாஸிடம் டிரைவராக வேலை பார்த்து இருக்கிறார். ஸ்ரீனிவாஸுக்கும் இவர்களுக்கும் இடையில் முன்விரோதம் இல்லை என்றாலும், சம்பளப் பிரச்னை இருந்துவந்துள்ளது.

முதல் கொலையைக் கண்டுபிடிக்கல; அந்தத் தைரியத்தில் அடுத்த கொலை! -  சென்னை மநீம நிர்வாகியின் பின்னணி

நாகராஜுவின் அப்பா காலத்திலிருந்தே அவர்களது குடும்பம் ஸ்ரீனிவாஸிடம் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால், இவ்வளவு நாள் வேலைபார்த்தும் நாகராஜுவுக்குக் குறைவான சம்பளமே கொடுத்துவந்திருக்கிறார். அதேபோல் டிரைவர் நாகேஷுக்கும் சம்பளப் பிரச்னை இருந்துவந்துள்ளது. இந்த வருத்தத்தில் இருந்த இருவருமே ஸ்ரீனிவாஸைப் பழிவாங்க எண்ணி இந்தத் திட்டத்தைப் போட்டுள்ளனர். அதன்படி, வரலட்சுமியைத் தாக்கிவிட்டு அவரிடம் இருக்கும் நகைகளைப் பறித்துச் செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காகக் கொள்ளை அடிப்பது, மற்றும் கொலை செய்வதை யூ டியூப்பில் உள்ள தெலுங்கு டப் சினிமா ஒன்றின் மூலம் பார்த்து தெரிந்துகொண்டுள்ளனர்.

மேலும், வரலட்சுமியைக் கொலை செய்வதற்கு அவர்கள் ஹோலி தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ரத்தக்கறையைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதற்காக ஹோலி தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கத்தி
கத்தி

சம்பவத்தன்று வரலட்சுமியைக் கொலை செய்துவிட்டு நகைகளையும் இரண்டு செல்போன்களையும் பணத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். காலில் இருந்த மெட்டியைக்கூட இவர்கள் விடவில்லை. அதைக் கழற்ற முடியவில்லை என்பதற்காகக் கால் விரல்களைத் துண்டாக்கியுள்ளனர். இதன்பின் இருவரும் யாருக்கும் தெரியாதது போல் அங்கிருந்து வெளியேறி பின்னர் கூட்டம் சேர்ந்த பிறகு கூட்டத்தோடு கூட்டமாகச் சடலத்தைக் காண வந்துள்ளனர்" என்று கூறியவர், அவர்கள் இருவரும் சிக்கியது எப்படி என்பதையும் விவரித்துள்ளார்.

``கொலை செய்தபிறகு அவர்கள் போலீஸ் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இருவரும் மிளகாய்ப் பொடி, எலுமிச்சை பழம், பவுடர் உள்ளிட்டவற்றை வீடு முழுவதும் தூவி இருந்ததுடன் உடல் அருகே மண் விளக்கையும் ஏற்றி இருந்தனர். ஆனால், ஸ்ரீனிவாஸ் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். அந்த நாய்தான் கடைசியில் துப்புக்கொடுத்தது.

மூத்த மகளைக் கொலை செய்த தாய் - 2வது குழந்தையின் கருக்கலைந்ததும் விபரீத முடிவு

சம்பவம் நடந்தபோது நாய் ஏன் குரைக்கவில்லை என்று ஸ்ரீனிவாஸிடம் கேட்டதற்கு, தெரிந்தவர்கள் வந்தால் நாய் குரைக்காது என்று கூறினார். இந்த க்ளூதான் இருவரையும் கண்டுபிடிக்க உதவியது. குடும்பத்துடன் நெருக்கமான ஒருவர், அவர் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம் என நினைத்து இந்த வீட்டுக்குப் பழக்கமானவர்களைப் பிடித்து விசாரிக்கத் தொடங்கினோம். அதேவேளையில், சிசிடிவியில் இவர்கள் இருவரது நடத்தையும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இருவரிடம் இருந்தும் கத்தி, நகைகள், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

நிஜாமாபாத் போலீஸ்
நிஜாமாபாத் போலீஸ்

குற்றத்தைச் செய்வதற்கு முன்பு, இருவருமே கொலை மற்றும் திருட்டை எவ்வாறு நடத்துவது என்பதை அறிய ஒரு குறிப்பிட்ட தெலுங்கு டப் திரைப்படத்தையும் வெவ்வேறு வீடியோக்களையும் யூடியூபில் பார்த்திருக்கிறார்கள். மேலும் மது அருந்திய பின்னரே, நாகராஜுவும் நாகேஷும் வரலட்சுமி தனியாக இருந்ததை அறிந்து ஸ்ரீனிவாஸின் இல்லத்திற்குச் சென்றுள்ளனர். குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் இருவரையும் விரைவாகக் கைது செய்துள்ளோம்" எனக் கூறினார்.

`6 மணி நேரத்தில் 1,800 பேர் கொலை!'- அஸ்ஸாமைத் துரத்தும் நெல்லி படுகொலை #NellieMassacre
அடுத்த கட்டுரைக்கு