Published:Updated:

கூலி பாக்கி வைத்ததால் ஆத்திரம்; முதலாளியின் பென்ஸ் காருக்கு தீ வைத்த தொழிலாளி! | வைரல் வீடியோ

கார்

உத்தரப்பிரதேசத்தில், ஊழியர் ஒருவர் தன்னுடைய வேலைக்கான முழு ஊதியத்தை கொடுக்காத முதலாளியின் விலையுயர்ந்த காரை தீ வைத்து எரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஊதியம்
ஊதியம்

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவை அடுத்த சதர்பூர் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், ஹெல்மெட் போட்டுக்கொண்டு பைக்கிலிருந்து வரும் ஒரு நபர், சாலையோரத்தில் நின்றிருந்த விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரின் மேல் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பிவிடுகிறார். அதைத் தொடர்ந்து காரின் உரிமையாளர், அந்த நபர்மீது போலீஸில் புகாரளிக்க, போலீஸும் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர், வீடுகளில் டைல்ஸ் ஓட்டும் ரன்வீர் எனத் தெரியவந்ததையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். இருப்பினும் ரன்வீர் எதற்காக அப்படிச் செய்தார் என்று பார்க்கையில் காரின் உரிமையாளர், அவரின் வீட்டில் டைல்ஸ் ஒட்டியதற்கான ஊதியத்தின் நிலுவைத்தொகையை ரன்வீருக்கு செலுத்தவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ரன்வீர் காரை எரிக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, நெட்டிசன்கள் பலரும் சட்டத்தை தானே கையிலெடுப்பது தவறு என்று விமர்சித்துவருகின்றனர்.