Published:Updated:

ஒன்றரை ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட எஸ்.யூ.வி-க்களைத் திருடிய கும்பல்! - நொய்டா போலீஸ் அதிர்ச்சி

கலிலுல்லா.ச

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 100-க்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடிய திருடர்களை உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது
கைது

டெல்லியில், கார் திருட்டு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. டெல்லியில் உள்ள பிரித் விஹார் என்ற பகுதியில், கார் வாங்குவதாக வந்த 3 பேர், எஸ்யூவி வாகனத்தை ஓட்டிப்பார்ப்பதாகக் கூறி, டெஸ்ட் டிரைவின்போது, கார் ஓனரின் கண்களில் மிளகாய்பொடியை எறிந்துவிட்டு, காருடன் எஸ்கேப் ஆகிவிட்டனர். இது தொடர்பாக, அந்த கார் ஷோரூம் ஓனர் நாமன் ஜெயின் கூறுகையில், `அவர்கள் மூவரும் தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் போல் தங்களை காட்டிக்கொண்டனர். பின்னர் சோதனை ஓட்டம் செய்துபார்க்க வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து அவர்கள், யாரும் இல்லாத பகுதிக்கு காரை ஓட்டிச்சென்று, உடன் இருந்த என் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவிவிட்டு, காருக்குள்ளிருந்த என்னை காலால் எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு, அவர்கள் தப்பிவிட்டனர்” என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட எஸ்.யூ.வி-க்களைத் திருடிய கும்பல்! - நொய்டா போலீஸ் அதிர்ச்சி

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் நொய்டாவில் தப்பிக்க முயன்ற இரண்டு திருடர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் அதிகமான வாகனங்களை டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள எஸ்யூவி வாகனங்களைத் திருடியுள்ளனர். காவல்துறையினர், அவர்களிடமிருந்து இரண்டு வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். நஃபீஸ், காலா இருவரும் ஔரங்காபாத் மற்றும் மீரட்டைச் சேரந்தவர்கள். நொய்டாவில் உள்ள பீ2 காவல்நிலையத்தின் உதவியுடன், செயின் பறிப்பு, ஆட்டோ திருட்டு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது, ``திருடும் வாகனங்களை, மீரட்டில் வைத்து தனித்தனியாக பிரித்து, பீகார் -அஸ்ஸாம் எல்லையில் விற்றுவிடுகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், தனக்கிருக்கும் தொடர்புகளைப் பயன்படுத்தி, திருடிய வண்டிகளுக்கு புதிய ஆர்சி புக்கை வாங்கிக் கொடுத்துவிடுகிறார்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.