Published:Updated:

பானி பூரி மசாலாவில் புழு; வடமாநில இளைஞரைக் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வடமாநில இளைஞரைக் கட்டிவைத்து உதைத்த பொதுமக்கள்!
வடமாநில இளைஞரைக் கட்டிவைத்து உதைத்த பொதுமக்கள்!

கடந்த சில நாள்களாக வியாபாரம் இல்லாததால் மீதமாகும் வேகவைத்த உருளைக்கிழங்குகளை, ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்திவருவதாகக் கூறியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, அம்பத்தூர் பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் கடந்த சில வருடங்களாக மாலை நேரங்களில் பானி பூரி விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். தினமும் மதியம் 2 மணிக்கே விற்பனையைத் தொடங்கிவிடும் அவர்களிடம் அருகிலுள்ள கல்லூரி, பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பானி பூரி சாப்பிட்டுவருகின்றனர். நேற்றைய தினம் கருக்கு பகுதியில் வழக்கம்போல் பானி பூரி விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு வடமாநிலத்தவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூட்டமாக பானி பூரி சாப்பிடச் சென்றிருக்கின்றனர்.

வேலூர்: செல்போன் திருடியதாக சந்தேகம் - சிறுவனை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்
பானி பூரி
பானி பூரி
Representational Image

அப்போது வடமாநில நபர் பானி பூரிக்குள் வைத்துக் கொடுத்த உருளைக்கிழங்கு மசாலாவில் துர்நாற்றம் வீசியிருக்கிறது. அதையடுத்து, தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மசாலாவை இளைஞர்கள் பரிசோதித்துப் பார்த்திருக்கின்றனர்.

அப்போது, அதில் புழுக்கள் ஊர்ந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனவர்கள், அதை விற்பனை செய்த வடமாநில நபரை மிரட்டி விசாரித்தபோது, கடந்த சில நாள்களாக வியாபாரம் இல்லாததால் மீதமாகும் வேகவைத்த உருளைக்கிழங்குகளை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்திவருவதாகக் கூறியிருக்கிறார்.

பானி பூரி கடை
பானி பூரி கடை

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பானி பூரி விற்பனை செய்த வடமாநில இளைஞரை அடித்து உதைத்து, இரண்டு கைகளையும் கட்டிவிட்டு, பட்டரைவாக்கம் பகுதியில் பானி பூரி தயாரிக்கும் இடத்துக்கே சென்று அந்தத் தள்ளுவண்டியின் உரிமையாளரையும் பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு