Published:Updated:

நள்ளிரவு நேரம்; ஏடிஎம் மெஷினுக்குளிருந்து எட்டிப் பார்த்த கொள்ளையன்! - போலீஸாரை அதிரவைத்த சம்பவம்

ஏடிஎம் இயந்திரத்துக்குள் கொள்ளையன்
ஏடிஎம் இயந்திரத்துக்குள் கொள்ளையன்

ஏடிஎம் இயந்திரத்துக்குள்ளிருந்து தொடர்ந்து சத்தம் வந்துகொண்டிருந்தது. அதனால், சற்று ஜெர்க் ஆன போலீஸார், இயந்திரத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, ஒரு நபர் அமர்ந்து பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைக்க முயன்றுகொண்டிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்துக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளி ஒருவரை, மோகனூர் போலீஸார் கைதுசெய்திருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்
உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்
"வேலை கன்ஃபார்ம்; பணத்தை  அனுப்புங்க!"- ரூ.56 லட்சம் மோசடி செய்த குடும்பத்தின் மீது வழக்கு பதிவு!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகிலிருக்கிறது அணியாபுரம். இந்தப் பகுதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டுவருகிறது. கிராமப் பகுதி என்பதால், இரவு நேரத்தில் இங்கு ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்தநிலையில், நேற்று முன்தினம், அதாவது 5-ம் தேதி நள்ளிரவு ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து திடீரெனச் சத்தம் கேட்டிருக்கிறது. அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற மோகனூர் காவல் நிலைய போலீஸார், ஏடிஎம் மையத்துக்குளிருந்து திடீரென வந்த சத்தத்தைக் கேட்டு, அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். ஏடிஎம் மையத்துக்குள் யாரும் இல்லாமல் இருந்திருக்கிறது. ஆனால், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த ஏடிஎம் இயந்திரத்துக்குள்ளிருந்து தொடர்ந்து சத்தம் வந்துகொண்டிருந்தது. அதனால், சற்று ஜெர்க் ஆன போலீஸார், ஏடிஎம் இயந்திரத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, இயந்திரத்துக்குள் ஒரு நபர் அமர்ந்து பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைக்க முயன்றுகொண்டிருந்தது தெரியவந்தது.

ஏடிஎம் இயந்திரத்துக்குள் கொள்ளையன்
ஏடிஎம் இயந்திரத்துக்குள் கொள்ளையன்

இதையடுத்து, உடனடியாக அந்த நபரைப் பிடித்த போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பரளி பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் வேலை பார்த்துவருவது தெரியவந்தது. அதோடு, அந்த இளைஞர் பீகார் மாநிலம், கிழக்கு சாம்தான் மாவட்டத்தைச் சேர்ந்த பேந்தரா ராய் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக, அந்த இளைஞரைக் கைதுசெய்த மோகனூர் காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்தனர். நள்ளிரவு நேரத்தில் ஏஎடிஎம் மெஷினுக்குள் அமர்ந்து வடமாநில இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம், அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நள்ளிரவு கனிமவளக் கொள்ளை! - ராத்திரி ரவுண்ட்-அப்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு