Published:Updated:

`வேறு எந்தப் பெண்ணுக்கும் இந்தக் கொடுமை நடக்கக் கூடாது!' -தஞ்சையில் கலங்கிய வடமாநிலப் பெண்

சிக்கிய பாலியல் கும்பல்
சிக்கிய பாலியல் கும்பல்

ராஜத்தின் செல்போனிலிருந்து அரசியல் பிரமுகர்களின் வாட்ஸ்அப்புக்கு இளம் பெண்களின் போட்டோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அப்படி யார் யாருக்கெல்லாம் போட்டோ அனுப்பப்பட்டுள்ளது என்ற ஆதாரங்களை திரட்டப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூரில் வட மாநில இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடுமையால் சிக்கிய பாலியல் கும்பலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். `எனக்கு நேர்ந்தது, இனி எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது, அந்தக் கும்பலை தப்பவிடாதீங்க' எனப் போலீஸாரிடம் கதறியிருக்கிறார், அந்த இளம்பெண்.

செந்தில்குமார் ராஜம் தம்பதி கும்பல்
செந்தில்குமார் ராஜம் தம்பதி கும்பல்

தஞ்சாவூரில் வடமாநில பெண் ஒருவரை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து அடித்துத் துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் எஸ்.பி மகேஷ்வரன்கீழ் செயல்படும் எஸ்.ஐ கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார், செந்தில்குமார், ராஜம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் பாலியல் கும்பலுக்குச் சொந்தமான 4 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள் மற்றும் ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

பெண்களிடம் பணம், நகை பறிப்பு; பாலியல் மிரட்டல் கும்பல் கைது!-பரமக்குடியில் ஒரு`பொள்ளாச்சி' அதிர்ச்சி

இந்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த அந்த வடமாநில பெண், சிகிச்சை முடிந்ததால் அரசுக்குச் சொந்தமான ஹோம் ஒன்றில் தகுந்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண், போலீஸாரின் விசாரணையில் ``எனக்கு நடந்ததுபோல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது. அரக்க குணம் படைத்த அந்தக் கும்பலை விட்டுவிடாதீங்க'' என அவர் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார் இதைக் கேட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாங்க முடியாமல் கண்கலங்கியுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``செந்தில்குமார், ராஜம் தம்பதி 15 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூரில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர். சில போலீஸார் உதவியுடன் இதைச் செய்ததால் அசுர வளர்ச்சியடைந்துள்ளனர். வடமாநில பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையால் இவை வெளிச்சத்துக்கு வந்தன. இதையடுத்து, இவர்களுக்கு உதவியாக இருந்த சஸ்பெண்டு செய்யப்பட்ட எஸ்.ஐ பிரபாகரன், ராமசந்திரன், பழனிவேல் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 4 கார்கள், 4 செல்போன்கள், ஒரு டைரி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

போலீஸாரால் கைப்பற்றப்பட்ட ராஜத்தின் டைரியில் சுமார் 1,000 செல் நம்பர்கள் உள்ளன. இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த பல முக்கிய வி.ஐ.பி-க்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல் நம்பர்களும் அடக்கம். இதை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ராஜத்தின் செல்போனிலிருந்து அரசியல் பிரமுகர்களின் வாட்ஸ்அப்புக்கு இளம் பெண்களின் போட்டோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அப்படி யார் யாருக்கெல்லாம் போட்டோ அனுப்பப்பட்டுள்ளது என்ற ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள்

இதை வைத்து ராஜத்துடன் தொடர்புடைய அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பிலிருந்தே சில வி.ஐ.பி-க்களுக்கு போன் செய்துள்ளனர். அப்போது, `சார் எங்களை இதில் தொடர்புபடுத்தாதீங்க' என அலறியதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவரே கூறியுள்ளார்.

மேலும் சிலர், 15 வருடங்கள் சிக்காமல் பல பெண்களை சீரழித்த அந்தக் கும்பலுக்கு எதிராக முதல் சாட்சியாகவும் ஆதாரமுமாக இருக்கிறார் அந்த இளம்பெண். அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து போதுமான ஆதாரங்களை திரட்டி சிக்கிய பாலியல் கும்பலுக்கு பெரும் தண்டனை வாங்கித் தருவோம்" என்றனர்.

10 சொகுசு வீடுகள், 30 இளம்பெண்கள், பாலியல் தொழில்... தஞ்சாவூர் பகீர்!

ஆனால், இந்த வழக்கின் விசாரணையில் போலீஸார் மெத்தனம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசியல் பிரமுகர்கள் அழுத்தம் கொடுப்பதால், அவர்களைக் காப்பாற்றுவதற்காக இதன் விசாரணையில் அலட்சியம் காட்டுவதாகவும் புகார் சொல்கின்றனர் சிலர்.

இதற்குப் பதில் அளிக்கும் போலீஸ் அதிகாரிகளோ, ``விசாரணையில் எந்த சுணக்கமும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களை குண்டாஸில் சிறையில் அடைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிச்சயம் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு