Published:Updated:

`தங்கத்துக்குப் பதில் கவரிங்!’ - விருதுநகரில் பெண்களைக் குறிவைக்கும் வடமாநில இளைஞர்கள்

நகையை பாலீஷ் செய்து தருவதாகக் கூறி பெண்களைக் குறிவைத்து வடமாநில இளைஞர்கள் மோசடியில் ஈடுபட்டு வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவன்ராஜ்
சிவன்ராஜ் ( ஆர்.எம்.முத்துராஜ் )

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் நடுப்பட்டி தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவரிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நகையை பாலீஸ் செய்து தருவதாகக் கூறி தங்க நகையை வாங்கியுள்ளார்.

இளைஞரின் பை
இளைஞரின் பை
ஆர்.எம்.முத்துராஜ்

சிறிது நேரத்துக்குப் பின் அந்த வடமாநில இளைஞர் நகையை திருப்பிக் கொடுத்துவிட்டு உடனடியாக அங்கே இருந்து கிளம்பினார். அந்த நகையை வாங்கிப் பார்த்த சித்ராவுக்கு இது தன்னுடையது இல்லை என்றும், கவரிங்போல இருப்பதாகவும் சந்தேகம் ஏற்பட்டது.

எனவே, அந்தப் பெண் உடனடியாக சத்தம் போட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த ஆட்கள் அந்த வடமாநில நபரைப் பிடித்து தாக்கினர். அதன் பின்னர் அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே வந்த காவல்துறையினர் அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

சிவன்ராஜ்
சிவன்ராஜ்
ஆர்.எம்.முத்துராஜ்

விசாரணையில், அந்த நபரின் பெயர் சிவன்ராஜ் என்பதும், வடமாநிலத்தைச் சேர்ந்த இவர் நகையை பாலீஷ் செய்வதாகக் கூறி கவரிங் நகையைத் திருப்பிக் கொடுத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல சில நாள்களுக்கு முன் ராஜபாளையத்திலும் நகையை பாலீஷ் செய்து தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய பீகார் மாநில இளைஞரையும் காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டில் இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.