Published:Updated:

திருவள்ளூர்: திருடச் சென்ற இடத்தில் வடமாநில இளைஞருக்கு நேர்ந்த சோகம்! - போலீஸ் விசாரணை

க்ரைம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் மூதாட்டி வீட்டில் திருட வந்த வடமாநில இளைஞர்களில் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்தார். ஆனால், அவரை பொதுமக்கள் அடித்தே கொலைசெய்துவிட்டதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.

திருவள்ளூர்: திருடச் சென்ற இடத்தில் வடமாநில இளைஞருக்கு நேர்ந்த சோகம்! - போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் மூதாட்டி வீட்டில் திருட வந்த வடமாநில இளைஞர்களில் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்தார். ஆனால், அவரை பொதுமக்கள் அடித்தே கொலைசெய்துவிட்டதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.

Published:Updated:
க்ரைம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கெட்னமல்லி கிராமத்தில் வடிவம்மாள் (80) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரின் மகள் செல்லம்மாள் (60). நேற்றிரவு செல்லம்மாள் கதவைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் தூங்கினார். வீட்டின் வெளியில் கட்டிலில் வடிவம்மாள் படித்திருந்தார். இந்த நிலையில் இரவில் மர்ம நபர்கள் வடிவம்மாள் வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள், வீட்டின் கதவை உடைத்தனர்.

கொள்ளை
கொள்ளை

சத்தம் கேட்டு வடிவம்மாள், கண்விழித்தார். அப்போது மூன்று பேர் இந்தியில் பேசியபடி கதவை உடைத்துக் கொண்டிருந்தனர். அதனால் திருடன், திருடன் என்று வடிவம்மாள் சத்தம் போட்டார். அதைக்கேட்ட மர்ம நபர்கள், வடிவம்மாளைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். வடிவம்மாளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். விவரத்தைக் கேட்ட பிறகு தப்பி ஓடிய மூன்று கொள்ளையர்களையும் பொதுமக்கள் விரட்டிச் சென்றனர்.

இந்த நிலையில் வடிவம்மாள் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியிலிருந்து முனகல் சத்தம் கேட்டது. அதனால் பொதுமக்கள் அங்குச் சென்று பார்த்தனர். அப்போது பள்ளத்தில் இளைஞர் ஒருவர் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மேலே தூக்கிக் கொண்டு பொதுமக்கள் வந்தனர். அவரிடம் விசாரித்தபோது அவரும் அவரின் கூட்டாளிகளும்தான் வடிவம்மாள் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் குறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

உடனடியாக போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இதற்கிடையில் காயங்களுடன் போராடிய வடமாநில இளைஞர், சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கெட்னமல்லி, கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி, கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார், சந்தேக மரணம் என்று வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் திருட வந்த இடத்தில் வடமாநில இளைஞரை பொதுமக்கள் அடித்துக் கொலைசெய்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், போலீஸாரோ வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் கொலை என்று வழக்கு பதிவுசெய்யவில்லை. இதற்கிடையில், உயிரிழந்த வடமாநில இளைஞர் யார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

விசாரணை
விசாரணை

அதனால் கெட்னமல்லி கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் வேலைப்பார்க்கும் வடமாநில இளைஞர்களிடம், உயிரிழந்த இளைஞரின் புகைப்படத்தைக் காண்பித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் தப்பி ஓடிய இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை, விசாரணைக்குப்பிறகு சந்தேக மரண வழக்கு கொலை வழக்ககாக மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.