Published:Updated:

சென்னை: லாட்ஜில் அறையெடுத்துத் தங்கிய வட மாநில ஆண், பெண் சடலமாக மீட்பு ! - போலீஸ் விசாரணை

ஆண், பெண் சடலமாக மீட்பு

திருவல்லிக்கேணியிலுள்ள லாட்ஜில் அறை எடுத்துத் தங்கிய வட மாநிலத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் விஷபாட்டிலும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

சென்னை: லாட்ஜில் அறையெடுத்துத் தங்கிய வட மாநில ஆண், பெண் சடலமாக மீட்பு ! - போலீஸ் விசாரணை

திருவல்லிக்கேணியிலுள்ள லாட்ஜில் அறை எடுத்துத் தங்கிய வட மாநிலத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் விஷபாட்டிலும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஆண், பெண் சடலமாக மீட்பு

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை தேரடி தெருவைச் சேர்ந்தவர் ராம்ராஜ். இவர் 7.9.2022-ம் தேதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் கடந்த 17 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள ஒயிட்ஹவுஸ் ரெசிடன்சியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்துவருகிறேன். ஓய்வு நேரத்தில் லாட்ஜிலேயே தங்கிக்கொள்வேன். கடந்த 3.9.2022-ம் தேதி இரவு நான் பணியிலிருந்தபோது சுமார் 9 மணியளவில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரன்ஜித்கோஸ் (24), அவருடன் வந்த இளம்பெண் அர்பிதாபால் (20) ஆகியோர் தங்க அறை கேட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது சென்னைக்கு வேலை தேடிவந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

தற்கொலை
தற்கொலை

அவர்களிடம் ஆவணங்களையும் அட்வான்ஸாக 2,000 ரூபாயையும் வாங்கிக்கொண்டு அறை எண் 102-ல் தங்க ஏற்பாடு செய்தேன். அந்த அறையில் இருவரும் தங்கியிருந்த சூழலில் பிரன்ஜித்கோஸ் மட்டும் வெளியில் சென்றுவிட்டு வந்தார். 5.9.2022-ம் தேதி மாலை 4 மணியளவில் வெளியில் சென்று ஏதோ ஒன்றை அவர் வாங்கிக்கொண்டு அறைக்குள் சென்றார். அதன் பிறகு அவர்கள் இருவரும் வெளியில் வரவில்லை. இந்த நிலையில், 7.9.2022-ம் தேதி அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து தூர்நாற்றம் வீசியது. பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஷோபாவில் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் பிரன்ஜித்கோஸ் இறந்து கிடந்தார். படுக்கையில் அழுகிய நிலையில் அந்தப் பெண் இறந்துகிடந்தார்.

விஷம் குடித்து தற்கொலை
விஷம் குடித்து தற்கொலை

அவர்கள் தங்கியிருந்த அறையில் விஷ பாட்டில் ஒன்று பாதி பயன்படுத்திய நிலையில் கிடந்தது. அதனால் இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என நினைக்கிறேன். எனவே இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``உயிரிழந்த அர்பிதாபால் சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால் அவர் சில தினங்களுக்கு முன்பு இறந்திருக்க வேண்டும். அவர் இறந்த பிறகுதான் பிரன்ஜித்கோஸ் விஷமருந்தி தற்கொலை செய்திருக்கலாம். இவர்கள் இருவரும் கணவன் மனைவியா அல்லது காதலர்களா என்று விசாரித்துவருகிறோம். லாட்ஜில் அறை எடுத்துத் தங்கும்போது வேலை தேடி வந்திருப்பதாகக் கூறியிருக்கின்றனர். அது தொடர்பாக இருவரின் உறவினர்களிடம் விசாரித்துவருகிறோம்" என்றனர்.