Published:Updated:

அஸ்ஸாம்: கொரோனா பாசிட்டிவ்; செவிலியர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - கைதான மூவருக்கும் பரிசோதனை

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( representational image )

இது போன்ற சூழலில் அவர் தற்கொலை செய்துகொள்வதாக அவ்வப்போது பேசிவருவதால் தங்களுக்கு மிகவும் அச்சம் எழுவதாக அவரது குடும்பத்தினர் வேதனைப்படுகின்றனர்.

கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை மீண்டும் வீடுகளுக்குள் முடக்கிப்போட்டு வைத்திருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் தங்கள் உயிரைப் பணயம்வைத்து இந்தப் பெருந்தொற்றிலிருந்து மள்வதற்குக் கடுமையாகப் போராடி வருகின்றனர். இது போன்ற அசாதாரணமான சூழலிலும் பெண் செவிலியர்கள், காவலர்களுக்கான பாதுகாப்பென்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அஸ்ஸாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர், தான் பணிபுரிந்துவந்த மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பணி முடிந்து இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் அவருக்கு லிஃப்ட் (Lift) கொடுத்துள்ளார். அதை முதலில் மறுத்த அந்தப் பெண் செவிலியரை, மிகவும் வற்புறுத்தி வண்டியில் ஏற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு மேலும் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
விகடன்

இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த மூன்று பேரை நேற்று (திங்கட்கிழமை) கைதுசெய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் செவிலியரிடம் இது குறித்து விசாரித்ததில்,

அன்று மருத்துவமனையில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மூவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தப்பட வேண்டுமென்றும், அதோடு, அவர்களை கைதுசெய்த காவல்துறையினரும் கொரோனா பரிசோதனை எடுத்து தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய காவல்துறையினர், “பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஓர் ஒற்றைத்தாயாக தனது இரு குழந்தைகளை கவனித்துவந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள அவர், கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சைபர் க்ரைம் - பாலியல் தொல்லை
சைபர் க்ரைம் - பாலியல் தொல்லை
மாதிரி படம்

இது போன்ற சூழலில் அவர் தற்கொலை செய்துகொள்வதாக அவ்வப்போது பேசிவருவதால் தங்களுக்கு மிகவும் அச்சம் எழுவதாக அவரின் குடும்பத்தினர் வேதனைப்படுகின்றனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் நம்மை நாமே நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதைப்போல, இது போன்ற மனித அரக்கர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. நமக்கு உயிர்க்கவசமாக செயல்படும் இவர்களைப் போன்ற மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் இரவு நேர பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் முழுமுதற் கடமை.

அடுத்த கட்டுரைக்கு