Published:Updated:

திருமணத்துக்கு நாள் குறிப்பு; காதலனைத் தேடிச் சென்ற நர்ஸ்! - தாயே அடித்துக் கொன்ற கொடூரம்

கொலை

சத்தியாவுக்கு வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்துவைக்க வீட்டில் முடிவெடுத்திருக்கின்றனர். அதற்கு சத்தியா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

திருமணத்துக்கு நாள் குறிப்பு; காதலனைத் தேடிச் சென்ற நர்ஸ்! - தாயே அடித்துக் கொன்ற கொடூரம்

சத்தியாவுக்கு வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்துவைக்க வீட்டில் முடிவெடுத்திருக்கின்றனர். அதற்கு சத்தியா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
கொலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாணவநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரின் மனைவி ஜெயலெட்சுமி (50). இவர்களின் மகள் சத்தியா (28). பி.எஸ்சி நர்ஸிங் படித்திருக்கும் சத்தியா சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நர்ஸாகப் பணிபுரிந்துவந்திருக்கிறார். அப்போது, சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இது குறித்துத் தகவலறிந்த ஜெயலெட்சுமி, தன் மகளைக் கண்டித்திருக்கிறார். ஆனாலும், இவர்களின் காதல் தொடர்ந்திருக்கிறது.

திருமணத்துக்கு நாள் குறிப்பு; காதலனைத் தேடிச் சென்ற நர்ஸ்! - தாயே அடித்துக் கொன்ற கொடூரம்

இதையடுத்து, சத்தியா வேலைக்குச் செல்வதை அவரின் குடும்பத்தினர் நிறுத்தியிருக்கிறனர். ஆனாலும், சத்தியாவின் காதல் தொடர்ந்து, செல்போனிலேயே வளர்ந்திருக்கிறது. இதற்கிடையே, சத்தியாவுக்கு வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்துவைக்க வீட்டில் முடிவெடுத்திருக்கின்றனர். அதற்கு சத்தியா மறுப்பு தெரிவித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியா வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். அப்போது, சத்தியாவை அவரின் தாய் ஜெயலெட்சுமி தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது, தாய்க்கும் மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மகளின் செயலால் ஆத்திரமடைந்த ஜெயலெட்சுமி அருகே இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து சத்தியாவின் தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயம் ஏற்பட்ட சத்தியா அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே, அவரின் உறவினர்கள் சத்தியாவை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

திருமணத்துக்கு நாள் குறிப்பு; காதலனைத் தேடிச் சென்ற நர்ஸ்! - தாயே அடித்துக் கொன்ற கொடூரம்

இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இது குறித்து நாகுடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். ஜெயலெட்சுமியைக் கைதுசெய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகளையே தாய், கட்டையால் தாக்கிக் கொலைசெய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism