Published:Updated:

``மன்னித்துவிடுங்கள்; படிப்பும் பிடிக்கவில்லை, தனிமையும் பிடிக்கவில்லை!"- தற்கொலை செய்துகொண்ட மாணவி

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

கல்லூரிக் குளியலறையில் மாணவி துப்பட்டவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸார் இந்துஜா உடலைக் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தி விசாரித்துவருகின்றனர்.

``மன்னித்துவிடுங்கள்; படிப்பும் பிடிக்கவில்லை, தனிமையும் பிடிக்கவில்லை!"- தற்கொலை செய்துகொண்ட மாணவி

கல்லூரிக் குளியலறையில் மாணவி துப்பட்டவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸார் இந்துஜா உடலைக் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தி விசாரித்துவருகின்றனர்.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பெருமழை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் மகள் இந்துஜா (வயது 18), கடிநெல்வயலிலுள்ள தொண்டு நிறுவனக் கல்லூரியில் தங்கி செவிலியர் முதலாமாண்டு படித்துவந்தார். இந்த நிலையில், கல்லூரி குளியலறையில் மாணவி துப்பட்டவால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸார் இந்துஜா உடலைக் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தி விசாரித்துவருகின்றனர். முன்னதாக தன் மகள் சாவில் சந்தேககம் இருப்பதாகக் கூறி வேதாரண்யம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். மாவட்ட எஸ்.பி ஜவாகர் உத்தரவின் பேரில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை நடத்தியது. அதை வீடியோ பதிவும் செய்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு இந்துஜாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேதாரண்யம் போலீஸார், மாணவி எதனால் தற்கொலை செய்துகொண்டார் என விசாரித்துவருகின்றனர். இந்த நிலையில், மாணவி எழுதிய உருக்கமான கடிதம் அவர் தங்கியிருந்த அறையில் கிடைத்தது. அந்தக் கடிதத்தை மாணவி இந்துஜா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தன் கைப்பட எழுதியிருக்கிறார். அதில், ``அப்பா... நீங்கள் மதுகுடிக்க வேண்டாம். அம்மாவை அடிக்காதீர்கள். இந்தப் படிப்பு எனக்குப் பிடிக்கவில்லை. தனிமையில் இருப்பதும் பிடிக்கவில்லை. உங்களுக்கு என்னென்னவோ செய்ய வேண்டும் என நினைத்தேன். அதையெல்லாம் அண்ணன் செய்வான். என்னை மன்னித்துவிடுங்கள்" என உருக்கமாக எழுதியிருந்தார்.

இது பற்றி வேதாரண்யம் டி.எஸ்.பி. முருகவேலிடம் பேசினோம். ``தற்கொலை செய்து கொண்ட செவிலியர் மாணவி இந்துஜா, தன் கைப்படவே தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தை கைப்பற்றியிருக்கிறோம். 

காவல் நிலையம்
காவல் நிலையம்

என்றாலும் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் கொடுத்ததால், இரண்டு மருத்துவர்கள்கொண்ட குழுவோடு பிரேத பரிசோதனை செய்து, அதை வீடியோவும் எடுத்திருக்கிறோம். மேற்கொண்டு விசாரணை நடந்துவருகிறது" என்றார்.

தற்கொலைத் தடுப்பு மையம்
தற்கொலைத் தடுப்பு மையம்