Election bannerElection banner
Published:Updated:

குமரி: 'உன்னைக் காதலிக்க நான் தகுதியானவள் இல்லை!' - தற்கொலைக்கு முன் காதலனுக்கு வீடியோ அனுப்பிய பெண்

தற்கொலை செய்துகொண்ட நிபியா
தற்கொலை செய்துகொண்ட நிபியா

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு உருக்கமாகப் பேசி, அதை வீடியோக்களாக பதிவு செய்து தனது காதலனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவைத்துள்ளார் நிபியா.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுன்ட் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவருக்கு நிபியா (21 ) என்ற மகள், எக்ஸெல் என்ற மகன் என இரு குழந்தைகள். நிபியா ஏர்வாடியிலுள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸிங் பயிற்சி மாணவியாக இருந்துவந்தார். அவருக்குச் சில ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர்.

இந்தநிலையில், நிபியா தக்கலை அருகேயுள்ள வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜோ என்பவருடன் நட்பாகப் பழகியிருக்கிறார். நட்பு காதலாக மாறியுள்ளது. இதற்கிடையே நிபியா, தனது ஆண் நண்பர்களுடனும் பழகிவந்திருக்கிறார். இது தெரிந்ததால், ஜோவுக்கும் நிபியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நிபியா திடீரென தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். அவர் தூக்கில் தொங்குவதற்கு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்யும்போது எடுத்த வீடியோ
தற்கொலை செய்யும்போது எடுத்த வீடியோ

இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் நிபியா உடலை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில் நிபியாவின் காதல் விவகாரம் தெரியவந்தது. மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு உருக்கமாகப் பேசி, அதை வீடியோக்களாகப் பதிவு செய்து தனது காதலனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவைத்திருக்கிறார் நிபியா. மேலும், நிபியா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதமும் சிக்கியது.

நிபியா தனது ஒரு வீடியோவில், ``நான் உன்கூட வாழணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் பப்பு. ஆனா, யாரோ ஃபிரெண்ட் சொன்னத நீ என்கிட்ட கேட்டே. அவ அப்பிடி இல்லைன்னு சொல்லியிருந்தா ஓகே. ஆனா நீ உண்மையா பொய்யான்னு என்கிட்ட திருப்பித் திருப்பி கேட்டேல்ல... அதான் பப்பு ரொம்ப வலிக்குது. ஆனா பரவாயில்லை. நான் உனக்காக இப்பிடி மாறின பிறகும் நீ கேட்டே பாத்தியா (என மாத்திரைகளை எடுத்துக் காட்டுகிறார்). நான் உன்கூட நல்லா வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா நீ என் கழுத்தை அறுத்துட்டே" என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

வீடியோவில் மாத்திரைகளைக் காட்டும் நிபியா
வீடியோவில் மாத்திரைகளைக் காட்டும் நிபியா

அடுத்ததாக நிபியா கழுத்தில் துப்பட்டாவை மாட்டியபடி பேசி, காதலனுக்கு அனுப்பிய வீடியோவில், ``சாரி பப்பு. என்னால முடியலை. நான் உன்கூட வாழணும்னு ஆசைப்பட்டேன், நடக்காது. நான் போறேன் பப்பு, நீ நல்லா இருக்கணும். மிஸ் யூ மா, பை" என அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

நிபியா எழுதியிருந்த கடிதத்தில், "என்னைப் பற்றி தெரிந்தும் என்னைக் காதலித்தாய். ஆனால் என்னால் மாற முடியவில்லை. நான் செய்த தவறுகளைத் திருத்திகொள்ள முடியவில்லை. உன்னைக் காதலிக்க நான் தகுதியானவள் இல்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என எழுதியிருந்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு