Published:Updated:

12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 3 சிறுவர்கள்... பணம் தராததால் வீடியோவை வெளியிட்ட கொடூரம்!

சிறார் வதை

ஒடிசாவில், 12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை சமூக வளைதளங்களில் வெளியிட்ட மூன்று சிறுவர்களை போலீஸ் கைதுசெய்திருக்கிறது.

12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 3 சிறுவர்கள்... பணம் தராததால் வீடியோவை வெளியிட்ட கொடூரம்!

ஒடிசாவில், 12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை சமூக வளைதளங்களில் வெளியிட்ட மூன்று சிறுவர்களை போலீஸ் கைதுசெய்திருக்கிறது.

Published:Updated:
சிறார் வதை

ஒடிசா மாநிலத்தில், 14 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் மூன்று பேர், 12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், அதை வீடியோ எடுத்து ரூ.20,000 பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். மேலும், கேட்ட பணத்தைக் கொடுக்கவில்லையென்பதால், சிறுவர்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூக வலைதளங்கள் (மாதிரி படம்)
சமூக வலைதளங்கள் (மாதிரி படம்)

ஒடிசாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பின்னர், அந்த வீடியோவைப் பார்த்த பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர், இந்த வீடியோ சம்பந்தமாகச் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை, சிறுமியிடம் விசாரித்தபோது, "பொறியியல் டிப்ளோமா படிக்கும் என்னுடைய நண்பரும், அவனுடைய நண்பர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, என்னைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்துகொண்டார்கள். மேலும், ரூ.20,000 தர வேண்டும் என்றும், தராவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவோம் என்றும் என்னை மிரட்டினார்கள். நான் பணம் தர முடியாது என மறுத்ததால், வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிட்டார்கள்" எனச் சிறுமி கூறியிருக்கிறார்.

கைது
கைது

சிறுமி இவ்வாறு கூறியதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். அதையடுத்து காவல்துறையினர், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று சிறுவர்களையும் கைதுசெய்தனர். மேலும், இது குறித்துப் பேசிய ஜெனாபூர் காவல் நிலைய ஆய்வாளர் உமாகந்தா நாயக், "மூன்று சிறுவர்கள் மீதும், போக்சோ சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.