Published:Updated:

லேசாக கருகிய ஆமைக்கறி... குடிபோதையில் மனைவியைக் கொன்றுபுதைத்த கணவன்!

திருடன் கைது

ரௌத்பாடா கிராமத்தில், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், மனைவியைக் கொன்ற கணவன், உடலை வீட்டின் கொல்லைப்புறத்திலேயே புதைத்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

லேசாக கருகிய ஆமைக்கறி... குடிபோதையில் மனைவியைக் கொன்றுபுதைத்த கணவன்!

ரௌத்பாடா கிராமத்தில், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், மனைவியைக் கொன்ற கணவன், உடலை வீட்டின் கொல்லைப்புறத்திலேயே புதைத்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
திருடன் கைது

ஒடிசாவில், ஆமைக்கறியை கருகவிட்டு சமைத்ததில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், குடிபோதையிலிருந்த கணவன், மனைவியைக் கொன்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சம்பல்பூர் மாவட்டத்தின் ரௌத்பாடா கிராமத்தில், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், மனைவியைக் கொன்ற கணவன், உடலை வீட்டின் கொல்லைப்புறத்திலேயே புதைத்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கணவன் - மனைவி சண்டை
கணவன் - மனைவி சண்டை

இந்தச் சம்பவம் போலீஸாருக்குத் தெரியவர விசாரணையில், சம்பந்தப்பட்ட தம்பதியினர் ரஞ்சன் பேடிங், சபித்ரி எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து போலீஸாரும் ரஞ்சன் பேடிங்கை கைது செய்தனர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன் சம்பவம் நடந்த தினத்தன்று ரஞ்சன் பேடிங், ஆமைக்கறியை வாங்கிவந்து மனைவியிடம் சமைக்கும்படி கூறிவிட்டு வெளியே சென்றிருக்கிறார். பின்னர் மதிய உணவுக்காக வீடுதிரும்பிய ரஞ்சன் பேடிங், குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

கொலை
கொலை

அப்போது மனைவியிடம், சமைக்கச்சொல்லியிருந்த ஆமைக்கறியைக் கொண்டுவருமாறு ரஞ்சன் பேடிங் கூறியிருக்கிறார். மனைவியும் கணவன் சொன்னபடியே, சமைத்த ஆமைக்கறியை எடுத்துவைத்தார். ஆனால், ஆமைக்கறி சற்று கருகியதால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியைத் தாக்க ஆரம்பித்திருக்கிறார். இதில் சுயநினைவை இழந்த மனைவி திடீரென இறந்துவிட்டார். இதனால் என்னசெய்வதென்றறியாது திகைத்த கணவன், தன்னுடைய மனைவி ஓடிவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் கணவன், கொலைசெய்யப்பட்ட தன்னுடைய மனைவியை வீட்டின் கொல்லைப்புறத்திலேயே புதைத்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது.