Published:Updated:

ஒடிசா: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர்கள் - பள்ளி மாடியிலிருந்து குதித்துத் தப்பித்த இளம்பெண்!

பாலியல் வன்கொடுமை முயற்சி ( சித்திரிப்புப் படம் )

இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

ஒடிசா: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர்கள் - பள்ளி மாடியிலிருந்து குதித்துத் தப்பித்த இளம்பெண்!

இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை முயற்சி ( சித்திரிப்புப் படம் )

ஒடிசாவின், ஜாஜ்பூர் மாவட்டத்தில் வசித்துவரும் அண்ணன்-தங்கை இருவர் தங்கள் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, தங்கள் கிராமத்துக்கு மாலை நேரத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர். பேருந்தில் அவர்கள் இருவரும் ஊர் திரும்பியபோது இரவாகிவிட்டது, மேலும் அந்த நேரத்தில் பலத்த மழை பெய்திருக்கிறது.

அவர்கள் இருவரும் பேருந்திலிருந்து தங்கள் கிராமத்துக்குச் செல்வதற்கான நிறுத்தத்தில் இறங்கியிருக்கின்றனர். அப்போது மழை அதிகமாக இருந்ததால், அந்தப் பேருந்து நிறுத்தத்திலிருந்த ஐந்து இளைஞர்கள் அவர்கள் இருவரையும், ``மழை அதிகமாக இருக்கிறது. அதனால் நீங்கள் இருவரும் அருகிலிருக்கும் பள்ளிக்குள் சென்று சிறிது நேரம் அமர்ந்திருங்கள். மழைவிட்டதும், கிளம்பிச் செல்லுங்கள்" எனக் கூறியிருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை முயற்சி
பாலியல் வன்கொடுமை முயற்சி

அவர்களின் பேச்சை நம்பிய அண்ணனும் தங்கையும் அந்தப் பள்ளிலேயே தங்க முடிவுசெய்திருக்கின்றனர். இந்த நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் அந்தப் பள்ளிக்குத் திரும்பிய அந்தக் கும்பல், அந்தப் பெண்ணிடம் அத்துமீற முயன்றிருக்கின்றனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் அண்ணன், அவர்களைத் தடுத்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் அவரை தாக்கிவிட்டு, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கின்றனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்கப் போராடிய அந்தப் பெண், பள்ளியின் மாடிக்கு ஓடியிருக்கிறார். அந்த இளைஞர்கள் தொடர்ந்து துரத்தவே செய்வதறியாது திகைத்த அந்தப் பெண் பள்ளியின் மாடியிலிருந்து தப்பிக்கும் நோக்கில் எகிறி குதித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

அதில் அந்தப் பெண்ணக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அண்ணன்-தங்கையின் அலறல் சத்தம் கேட்டு பள்ளிக்கு விரைந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், அண்ணன்-தங்கை இருவரையும் தாக்கி, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஐந்து இளைஞர்களை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.