Published:Updated:

`உடல் முழுக்க கீறல்கள்… கழுத்தை நெறித்த தடங்கள்?!'- படப்பையில் ஒடிசா பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

ஒடிசா பெண்
ஒடிசா பெண்

இருவரும் கடந்த சில தினங்களாகவே செல்போனில் கடுமையாகச் சண்டை போட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மனீஷ் தலைமறைவாக இருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் பிரவீனா (பெயர் மாற்றம்). அதே மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவரும் அவருடன் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் படப்பை அருகே உள்ள ஆதனஞ்சேரியில் வாடகை வீட்டில் ஒன்றாகவே தங்கி வந்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

நேற்று காலை சுமார் 6 மணி அளவில் ரஞ்சிதா வழக்கம்போல வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது பிரவீனா வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு மாலை 4 மணிக்கு ரஞ்சிதா வீடு திரும்பியுள்ளார். அப்போது போர்வை போர்த்தித் தூங்கும் நிலையில் பிரவீனா இருந்துள்ளார். ரஞ்சிதா தட்டி எழுப்பியபோது அசைவற்று இருந்தார் பிரவீனா. இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற ரஞ்சிதா உடனே 108-க்கு தகவல் தெரிவித்தார். 108 ஆம்புலன்ஸில் வந்தவர்கள் பிரவீனா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்பு தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர் அவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரவீனாவின் கழுத்து நெரிக்கப்பட்ட தடங்களும் தென்பட்டிருக்கிறது. மேலும் உடல் முழுவதும் நகக் கீறல்கள் இருந்திருக்கின்றன. இதனால் காவல்துறையினர் கொலையா என்பது குறித்து விசாரணையைத் தொடங்கினார்கள். பிரவீனாவை ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ் என்பவர் காதலித்து வந்திருக்கிறார். சோழிங்கநல்லூர் அருகே உள்ள சிறுசேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் மனீஷ்.

crime
crime
representational image

இருவரும் கடந்த சில தினங்களாகவே செல்போனில் கடுமையாகச் சண்டை போட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மனீஷ் தலைமறைவாக இருக்கிறார். மனீஷ் பாலியல் வன்முறை செய்து பிரவீனாவை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளதால் மனீஷை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு