Published:Updated:

ஒடிசா: 5 மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை; 24 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸிடம் சிக்கிய கொலைக் குற்றவாளி

போலீஸ்: சித்திரிப்புப் படம்

சங்கர் பிஸ்வால்,1998-ல் இரண்டு கொலைகள், 10 கொலை முயற்சிகள், ஒரு திருட்டு வழக்கு உட்பட குறைந்தது 13 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.

ஒடிசா: 5 மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை; 24 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸிடம் சிக்கிய கொலைக் குற்றவாளி

சங்கர் பிஸ்வால்,1998-ல் இரண்டு கொலைகள், 10 கொலை முயற்சிகள், ஒரு திருட்டு வழக்கு உட்பட குறைந்தது 13 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
போலீஸ்: சித்திரிப்புப் படம்

24 ஆண்டுகளாக, போலீஸிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர், ஒடிசாவில் தனது சொந்த கிராமத்திலேயே போலீஸிடம் பிடிபட்டார்.

தற்போது 42 வயதாகும் சங்கர் பிஸ்வால் எனும் இந்தக் குற்றவாளி, ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம், கல்லிகோட் காவல் நிலையப் பகுதியில் உள்ள துளசிபூர் எனும் கிராமத்தில் கடந்த செவ்வாயன்று தனது குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது, தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி போலீஸார் அவரைப் பிடித்தனர் என காவல்துறை கண்காணிப்பாளர் பிரிஜேஷ் ராய் கூறியிருக்கிறார். சங்கர் பிஸ்வால் மீதுள்ள குற்றங்கள் குறித்து பேசிய பிரிஜேஷ் ராய், ``1998-ல் 2 கொலைகள், 10 கொலை முயற்சிகள், ஒரு திருட்டு வழக்கு உட்பட குறைந்தது 13 வழக்குகளில் அவர் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்" எனக் கூறினார்.

ஒடிசா - 24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
ஒடிசா - 24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

மேலும் இது குறித்துப் பேசிய எஸ்.பி., ``சங்கர் பிஸ்வாலைப் பிடிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஒவ்வொருமுறையும் அவர் போலீஸிடமிருந்து தப்பிப்பதில் ஜெயித்துவிட்டார். அவரைக் கைதுசெய்ய, கேரளாவுக்கும் தனிக்குழுவை அனுப்பியிருந்தோம். இருப்பினும், அவர்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை" எனத் தெரிவித்தார்.

பின்னர் சங்கர் பிஸ்வால் பற்றிக் கூறிய கல்லிகோட் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ஜெகநாத் மல்லிக், சங்கர் பிஸ்வால் கடந்த 24 வருடங்களில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, சூரத் ஆகிய நகரங்களில் கூலி வேலை செய்ததாகவும், அவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism