Published:Updated:

திருமணமாகி ஒரு வருடம்தான்... பணத்துக்காக மனைவியை விற்ற கணவன் கைது - அதிர்ச்சி சம்பவம்!

மனைவியை விற்ற கணவன் கைது!

பணத்துக்காகத் தன் மனைவியை வேறொரு நபரிடம் விற்று, திருமணம் செய்துவைத்த கணவனை ஒடிசா போலீஸார் கைதுசெய்தனர்.

திருமணமாகி ஒரு வருடம்தான்... பணத்துக்காக மனைவியை விற்ற கணவன் கைது - அதிர்ச்சி சம்பவம்!

பணத்துக்காகத் தன் மனைவியை வேறொரு நபரிடம் விற்று, திருமணம் செய்துவைத்த கணவனை ஒடிசா போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
மனைவியை விற்ற கணவன் கைது!

ஒடிசாவைச் சேர்ந்த நபர் ஒருவர், திருமணமாகி ஒரு வருடம் ஆகியிருந்த நிலையில் பணத்துக்காகத் தன்னுடைய மனைவியை டெல்லியில் ஒருவரிடம் விற்று, திருமணம் செய்துவைத்துவிட்டு வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசாவின் காலாஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கீரா பெருக் (Kheera Beruk) (25), கடந்த ஓராண்டுக்கு முன்பு பூர்ணமி (22) எனும் பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார்.

திருமணம்
திருமணம்
சித்திரிப்புப் படம்

இந்த நிலையில், கீரா பெருக், கடந்த அக்டோபர் 30-ம் தேதியன்று தினக்கூலி வேலை செய்வதற்காகத் தன் மனைவியுடன் டெல்லிக்குச் சென்றிருக்கிறார். ஆனால் கீரா பெருக், அங்கு வேறொரு நபரிடம் தன் மனைவியை விற்று, திருமணம் செய்துவைத்துவிட்டு, தான் மட்டும் தனியாக வீடு திரும்பியிருக்கிறார். அதையடுத்து கடந்த 5-ம் தேதியன்று, பூர்ணமி தன் தந்தை குலமணி போய்க்கு போன் செய்து, அங்கு நடந்ததைப் பற்றிக் கூறி, திருமணம் தொடர்பான வீடியோவையும் அவருக்குப் பகிர்ந்திருக்கிறார்.

மனைவியை விற்ற கணவன் கைது!
மனைவியை விற்ற கணவன் கைது!

அதைத் தொடர்ந்து பெண்ணின் தந்தை, தன்னுடைய மகளைப் பணத்துக்காகக் கீரா பெருக் விற்றுவிட்டதாகவும், மகளை மீட்டுத்தருமாறும் போலீஸில் புகாரளித்திருக்கிறார். மேலும் அவர், தன் மகள் விற்கப்பட்ட நபரின் முகவரி தெரியாது என்று கூறியிருக்கிறார். பின்னர் அந்தப் புகாரின்பேரில் குற்றம்சாட்டப்பட்ட கீரா பெருக் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், உடனடியாக அந்த நபரைக் கைதும் செய்தனர்.

இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி கங்காதர் மெஹேர், ``குற்றம்சாட்டப்பட்ட கீரா பெருக்கை நாங்கள் கைதுசெய்து அனுப்பியிருக்கிறோம். பாதிக்கப்பட்டவரை நாங்கள் இன்னும் மீட்கவில்லை" என்று தெரிவித்தார்.