Published:Updated:

300 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்; 23 பெட்டிகள்!- மனைவி மரணத்தில் முன்னாள் ராணுவ மருத்துவருக்கு ஆயுள்

சோம்நாத்
சோம்நாத்

நான் அப்பாவி என் மனைவியை நான் கொலை செய்யவில்லை எனக் கத்திக்கொண்டே நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினார் அந்த 78 வயது டாக்டர்.

மனைவியைக் கொடூரமாகக் கொன்ற வழக்கில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் சோம்நாத் பரிதாவுக்கு ஆயுள் சிறை வழங்கி குர்தா (Khurda) மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சம்பவம் இது. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சோம்நாத் தன் மனைவி உஷாஸ்ரீயுடன் ( வயது 61) ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் வசித்து வந்துள்ளார். 1992-ம் ஆண்டு ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்ற சோம்நாத் பல்வேறு நிறுவனங்களில் உயர்பதவியை அலங்கரித்துள்ளார்.

சோம்நாத், உஷாஸ்ரீ
சோம்நாத், உஷாஸ்ரீ

துபாயில் செட்டிலாகிவிட்ட சோம்நாத்தின் மகள் தன் தாய் உஷாவிடம் பேசுவதற்காக 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் போன் செய்துள்ளார். போனை எடுத்த சோம்நாத், `அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை தூங்குகிறார்’ எனப் பதிலளித்துள்ளார். சில நாள்கள் கழித்து மீண்டும் அவர் போன் செய்துள்ளார். போனை எடுத்த சோம்நாத் மகளிடம் நன்றாகப் பேசியுள்ளார். அம்மாவிடம் கொடுங்கள் என்றபோது உடல்நிலை சரியில்லை எனப் பதிலளித்துள்ளார். ஆனால், உஷாவின் உடல்நலம் குறித்து மகளிடம் எதுவும் கூறவில்லை. மருத்துவரான தந்தை நம்மிடம் எதையோ மறைக்கிறார் அம்மாவுக்கு என்ன பிரச்னையாக இருக்கும் என சிந்தித்தவர் அருகில் வசிக்கும் தன் மாமா ரஞ்சனுக்கு ஜூன் 21-ம் தேதி போன் செய்து நடந்ததைக் கூறியுள்ளார்.

ரஞ்சனின் சகோதரிதான் உஷாஸ்ரீ. இதையடுத்து ரஞ்சன் ஜூன் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு சோம்நாத் வீட்டுக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாக காலிங் பெல்லை அழுத்திய பிறகே, சோம்நாத் கதவைத் திறந்துள்ளார். வீட்டின் கதவைத் திறந்த சோம்நாத்திடம் தன் சகோதரி குறித்து ரஞ்சன் கேட்டுள்ளார். அப்போது சோம்நாத் கதவை வேகமாகப் பூட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். அப்போது `என் மனைவி தற்கொலை செய்துகொண்டாள் ஷீரடியில் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்காக உடலை சேமித்து வைத்திருக்கிறேன்’ எனக் கூறி போலீஸாருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

Representation image
Representation image

துண்டு துண்டுகளாக டிபன் பாக்ஸில் இருந்த உடல் பாகங்களை காட்டி மேலும் அதிர வைத்தார் . அவரது வீட்டில் இருந்து 2 இரும்புப் பெட்டிகள் மற்றும் 21 டிபன் பாக்ஸில் துண்டாக்கி வைக்கப்பட்டிருந்த உஷாஶ்ரீயின் உடலை மீட்டனர். சுமார் 300 துண்டுகளாக உஷாவின் உடல் பாகங்களைத் துண்டாக்கி வைத்திருந்தார். ஆசிட், பினாயில் ஆகியவை அந்த வீட்டில் இருந்து கண்டெடுத்தனர். வீட்டில் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வடிகாலில் சடலம்;உடலைத் துளைத்த தோட்டாக்கள்?!- டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட மத்திய உளவுத்துறை காவலர்

உஷா இறந்து 20 நாள்களுக்கு மேல் இருக்கும் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. உடல்பாகங்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில அமிலங்களை ஊற்றி வைத்துள்ளார். துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கால்கள் ஒரு பெட்டியில் இருந்தன. இதையடுத்து சோம்நாத் பரிதா கைது செய்யப்பட்டார். மனைவியின் உடலை துண்டுத் துண்டாக்கி டிப்பன் பாக்ஸில் அடைத்து வைத்த பின்னரும் தன்னுடைய கிளினிக் சென்று நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

கைது
கைது
`ஓவர் ஸ்பீடுக்கும் மேல; பயணிகள் மீது அக்கறையே இல்ல!’ -மைசூர் விபத்தை விவரிக்கும் இளம்பெண்

இந்த வழக்கு குர்தா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 7 வருடங்கள் நடந்து வருகிறது. போலீஸாரின் விசாரணையில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்தது தெரியவந்தது. `என் மனைவி தற்கொலை செய்துகொண்டாள்; ஷீரடியில் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்காக உடலை சேமித்து வைத்திருந்தேன்’ என்ற பதிலையே திரும்பத் திரும்ப கூறிவந்தார். இந்நிலையில் இந்தவழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிமன்றம் ஆயுள் சிறையும், ரூ.50,000 அபராதமும் விதித்துள்ளது.

தீர்ப்பு வாசிக்கப்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, `நான் அப்பாவி என் மனைவியை நான் கொலை செய்யவில்லை’ என கூறிக்கொண்டே சென்றார் அந்த 78 வயது டாக்டர். `இந்த வழக்கில் சோம்நாத்தை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தீர்ப்பை காலதாமதப்படுத்துவதற்காக சோம்நாத் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கறிஞரை மாற்றி வந்தார். கண்ணால் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை என்பதால் இந்த வழக்கில் சூழ்நிலை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு