Published:Updated:

இஎம்ஐ-யில் செல்போன் வாங்கி பரிசளித்த கணவர்; அதிருப்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி!

தற்கொலை

ஒடிசாவில், இ.எம்.ஐ-யில் வாங்கிய செல்போனை கணவன் பரிசளித்ததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஎம்ஐ-யில் செல்போன் வாங்கி பரிசளித்த கணவர்; அதிருப்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி!

ஒடிசாவில், இ.எம்.ஐ-யில் வாங்கிய செல்போனை கணவன் பரிசளித்ததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தற்கொலை

ஒடிசா மாநிலத்தின் மலகங்கிரி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் கன்ஹேய், ஜோதி மண்டல் என்ற தம்பதியர் வசித்துவந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் திருமணம் ஆனதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய கணவர் இ.எம்.ஐ-யில் வாங்கிய செல்போனைத் தனக்குப் பரிசாக வழங்கியதால், அதிருப்தியடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், போலீஸார் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் போலீஸார், ``கன்ஹேய், இ.எம்.ஐ-யில் அந்த செல்போனை வாங்கியிருக்கிறார். தன் மனைவிக்கு இவர் இந்த இ.எம்.ஐ குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் கன்ஹேய், இறுதித் தவணைத் தொகையைச் செலுத்தியவுடன், நிதி நிறுவன அதிகாரிகள் தம்பதியரின் கையெழுத்து பெறுவதற்காக அவர்களுடைய வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.

செல்போன்
செல்போன்

அப்போதுதான் ஜோதிக்கு தான் பயன்படுத்திய செல்போன் இ.எம்.ஐ-யில் வாங்கியது தெரியவந்திருக்கிறது. இருப்பினும் கன்ஹேய் இ.எம்.ஐ-யில் செல்போன் வாங்கிப் பரிசளித்ததை ஜோதியிடம் கூறவில்லை. இதனால் கோபமடைந்த ஜோதி, தன் கணவர் கன்ஹேயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே மோதல் முற்றிய நிலையில், கணவன் முன்பு ஜோதி திடீரென விஷம் குடித்திருக்கிறார். இதைப் பார்த்த கன்ஹேய் அதிர்ச்சியில் தரையில் சரிந்ததாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, இருவருமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஜோதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். கன்ஹேய் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்" எனக் கூறினார்.