Published:Updated:

திருச்சி:`ட்ரிப்பை கேன்சல் பண்ணு, இல்லைன்னா...'-பயணியைப் பதறவைத்த ஓலா டிரைவர்; ஆடியோவும் பின்னணியும்

``என்மேல என்னங்க தப்பு இருக்கு... அவர் அதிகமா கேட்ட பணத்தையும் கொடுக்கிறேன்னேன். நாங்கள் இருக்கும் இடத்துக்கு வராமல், இவர் நிற்கும் இடத்துக்கு வரச் சொன்னால் என்ன அர்த்தம்... ஓலா ஆட்டோன்னா என்ன சார்?"

``இந்த ட்ரிப்பை நான் கேன்சல் பண்ண முடியாது. அப்படி பண்ணுனா என்கிட்ட காசு எடுத்துடுவாங்க. நீ ஒழுங்கா கேன்சல் பண்ணு. இல்லைன்னா உன்னைத் தேடி வந்து வெட்டுவேன்" என்று ஓலா ஆட்டோ டிரைவர் ஒரு பயணியை காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. என்ன நடந்தது, எதற்காக அந்த ஓலா ஆட்டோ டிரைவர் அப்படிப் பேசினார்?

ஓலா கேப்ஸ்
ஓலா கேப்ஸ்

ஆடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த இளைஞரிடம் பேசினோம். ``தீபாவளிக்கு மறுநாள் 5-ம் தேதி சாயங்காலம் வீட்டுல அப்பா, அம்மாவை அழைச்சுக்கிட்டு துணிக்கடைக்குப் போயிருந்தேன். துணி எடுத்துட்டு அவங்களால டூ வீலருல வரமுடியாதுங்கறதால, ஆட்டோவுல போகலாம்னு சொன்னாங்க. சரி என்று திருச்சி செயின்ட் ஜோசப் சர்ச்கிட்ட நின்றுகொண்டு, ஓலா (Ola TN-79-A- 9070) ஆட்டோவுக்கு புக் பண்ணினேன். அதுக்கு கட்டணம் 90 ரூபாய் என்று எனது வேலட்டில் காட்டியது. கொஞ்சம் நேரம் கழித்து அந்த ஆட்டோ டிரைவர் போன் பண்ணினார். ``சார் நீங்க சொல்ற தூரத்துக்கு 90 ரூபாய் பத்தாது.

கொஞ்சம் அதிகமா கொடுங்க சார்” என்றார். வழக்கமா ஆட்டோ டிரைவர் கேட்பதுதானே என்று 120 ரூபாய் கொடுக்கச் சம்மதித்து அவரை வரச் சொன்னேன். கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் அந்த ஆட்டோ டிரைவர் போன் பண்ணி, ``சார் பனானா லீஃப் (Banana Leaf) ஹோட்டல் கிட்ட வாங்க” என்றார். அதற்கு நான், ``சார் என்னோட அம்மா, அப்பா உடல்நிலை சரியில்லாதவுங்க... வயசானவுங்க. அவ்வளவு தூரம் வர்றது கஷ்டம்.

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

நீங்க வாங்க சார்” என்றேன். அதற்கு அவரு, ``நீ கொடுக்குற காசுக்கு இங்கிருந்துதான் வர முடியும்!'’ என்று தரக்குறைவான ஒரு வார்த்தையை விட்டார். பதிலுக்கு நான் பேச, எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு ஆட்டோ டிரைவர், ``இந்த ட்ரிப்பை நான் கேன்சல் பண்ண முடியாது. அப்படிப் பண்ணுனா என்கிட்ட காசு எடுத்துடுவாங்க. நீ ஒழுங்கா கேன்சல் பண்ணு’’ என்று மிரட்டலாகச் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``என்னங்க மிரட்டுறீங்க?’’ு என்று கேட்டதுக்கு, ``ஒழுங்கு மரியாதையா ட்ரிப்பை கேன்சல் பண்ணுடா. இல்லைன்னா எங்கிருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன்’’ என்றார். ``என்னங்க இப்புடி பேசுறீங்க’ என்றதற்கு, காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டினார். அந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததோடு, ஓலா நிர்வாக அதிகாரிகளிடம் பேசினேன். அவர்களும் அந்த ஆடியோவைக் கேட்டுவிட்டு, அவர்மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கவிருக்கிறேன்.

ஓலா
ஓலா

என்மேல என்னங்க தப்பு இருக்கு. அவர் அதிகமா கேட்ட பணத்தையும் கொடுக்கிறேன் என்றுதான் சொன்னேன். நாங்கள் இருக்கும் இடத்துக்கு வராமல், இவர் நிற்கும் இடத்துக்கு வரச் சொன்னால் என்ன அர்த்தம்... ஓலா ஆட்டோன்னா என்ன சார்... அதுவே எனக்கு புரியலை. விவரம் தெரிந்த எனக்கே இந்த நிலைமைன்னா... ஒண்ணும் தெரியாத சாமான்ய மக்களை எப்படியெல்லாம் பேசுவாங்க.

"அடப்போங்கப்பா வண்டி எப்பதான் வரும்?!"- ஓலா ஸ்கூட்டர் டெலிவரியில் என்ன பிரச்னை? ஏன் இவ்வளவு தாமதம்?

இது மாதிரி ஆட்டோ டிரைவர்களால் தான் ஒட்டுமொத்த ஆட்டோ டிரைவர்களுக்குமே கெட்ட பெயர். இவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும்’’ என்றவர், ``என்னிடம் பேசிய ஆடியோ, என்ன நடந்தது என்று நான் பேசிய ஒரு ஆடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறேன். அவர்மீது நடவடிக்கை எடுக்கும் வரையிலும் விட மாட்டேன’’ என்றார் காட்டமாக.

இது குறித்து ஆட்டோ டிரைவர் ராஜவேலிடம் பேசினோம்.``என்மீது எந்தத் தவறும் இல்லை. அவர்தான் `உன்னால் முடிந்ததைப் பாரு’ என்றார். அந்தக் கடுப்பில்தான் பேசினேன்" என்றார்.

திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சக்திவேல்
திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சக்திவேல்

தகவலைச் சொல்லி திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சக்திவேலிடம் பேசினோம். முழுமையாகக் கேட்டுக்கொண்டவர் ``கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு