Published:Updated:

சென்னை: தனியாக நடந்து சென்ற மூதாட்டி! - இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இரவு 10 மணிக்கு மேல் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் பேசிய இளைஞர், வலுகட்டாயமாக அவரை இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்திருக்கிறார்.

சென்னை திருவொற்றியூர், காலடிப் பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர், இரவு 10 மணிக்கு மேல் வீட்டைவிட்டு தனியாக வெளியில் சென்றார். அப்போது அவரிடம் இளைஞர் ஒருவர் பேச்சுக்கொடுத்தார். பின்னர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மூதாட்டியை இளைஞர் வலுகட்டாயமாக இழுத்துச் சென்றார். அங்குவைத்து அவரை மிரட்டி, இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

பின்னர் மூதாட்டியின் தலையில் கல்லைப் போட்டுவிட்டு இளைஞர் தப்பிச் சென்றுவிட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதிக்கு சிலர் வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டியை மீட்டு பொது மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இது குறித்துத் தகவலறிந்ததும் திருவொற்றியூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பிறகு சிகிச்சை பெற்றுவரும் மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளைஞர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த தகவலை மூதாட்டி கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு போலீஸாரும் மூதாட்டியின் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சிசிடிவி
சிசிடிவி
சென்னை: மின்சார ரயிலில் மயக்கம்; பாலியல் வன்கொடுமை! - பெண்ணுக்கு ரயில்வே ஊழியர்களால் நேர்ந்த கொடூரம்

இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்காக சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால் சிசிடிவி-யில் இளைஞரின் உருவம் சரியாகத் தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் போதிய மின் விளக்குகள் இல்லாததால், சமூக விரோதச் செயல்கள் அடிக்கடி நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு