Published:Updated:

பாக்கு தோட்டத்தில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை; முதியவருக்கு 8 ஆண்டு சிறை - நடந்தது என்ன?

Child Abuse ( Image by Gerd Altmann from Pixabay )

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திராவிட மணியை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர்.

பாக்கு தோட்டத்தில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை; முதியவருக்கு 8 ஆண்டு சிறை - நடந்தது என்ன?

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திராவிட மணியை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர்.

Published:Updated:
Child Abuse ( Image by Gerd Altmann from Pixabay )

நீலகிரி மாவட்டவத்தைச் சேர்ந்தவர் திராவிடமணி. 54 வயதான இவர், 9, 12 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த 2019-ம் ஆண்டு அவரது தோட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இரண்டு சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திராவிடமணியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டியிலுள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

திராவிடமணி
திராவிடமணி

தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் செந்தில், ``கடந்த 2019 ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ம் தேதி 9 வயது மற்றும் 12 வயதுள்ள இரண்டு சிறுவர்களுக்கு இலவச லேப்டாப் தருவதாகக் கூறி தனது பாக்கு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் திராவிடமணி. சிறுவர்கள் இருவரிடமும் பாலியல்ரீதியாக தொந்தரவு செய்திருக்கிறார். சிறுவர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய திராவிடமணிக்கு, போக்சோ சட்டத்தின் 9-வது பிரிவின் படி ஐந்து ஆண்டுச் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், போக்சோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8-ன் கீழ் மூன்று ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார். சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்" என்றார்.