Published:Updated:

`ஊரடங்கால் அலறல் சத்தம் கேட்கல' -குட்டி போட்ட நாயைக் கல்லால் எறிந்த முதியவருக்கு நேர்ந்த கொடூரம்

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

ஊரடங்கு காரணமாக சென்னை அம்பத்தூர் டெலிபோன் இணைப்பகச் சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது. அந்தச் சமயத்தில் நடுரோட்டில் கல்லால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்டார்.

சென்னை அம்பத்தூர் டெலிபோன் இணைப்பகம் அருகே கடந்த 10-ம் தேதி முதியவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸுக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், முதியவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலில் விபத்து எனக்கருதிய போலீஸார் அதுதொடர்பாக விசாரித்தனர்.

முதியவரைக் கொலை செய்த வாலிபர்
முதியவரைக் கொலை செய்த வாலிபர்
`மதுபோதையில் மனைவி, மகனை வெட்டிய தந்தை; கொலை செய்த மகன்!' -சென்னையில் நடந்த கொடூரம் #Lockdown

விபத்தில் காயமடைந்த முதியவரிடம் போலீஸார் விசாரித்தபோது அவரும் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, முதியவரை ஒருவர் கல்லால் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதைப்பார்த்த போலீஸார், முதியவரைக் கொலை செய்ய முயன்றவர் யாரென்று விசாரித்தனர். இதுதொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயராகவன், வழக்குபதிந்து விசாரித்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அம்பத்தூர் தொழிற்பேட்டை டெலிபோன் இணைப்பகம் அருகே கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணா என்கிற கிருஷ்ணன் (64) என்பவர் பிளாட்பாரத்தில் தங்கியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், அவ்வழியாகச் செல்லும் மக்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டுவந்துள்ளார். சம்பவத்தன்று டெலிபோன் இணைப்பகம் அருகே நாய் ஒன்று குட்டிபோட்டுள்ளது.

யார் இந்தப் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ்? - டி.என்.பி.எஸ்.சி சேர்மனாகத் தேர்வான பின்னணி
சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

அதிகாலை ஒரு மணி அளவில் கிருஷ்ணன் அவ்வழியாகச் சென்றார். அப்போது அவரைப்பார்த்து நாய் குரைத்துள்ளது. அதனால் கிருஷ்ணன், கல்லால் நாயைத் தாக்கியுள்ளார். கிருஷ்ணன் வீசிய கல் ஒன்று நாயின் அருகே பிளாட்பாரத்தில் படுத்திருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜிபுல் மியா (20) மீது விழுந்துள்ளது. அதனால் கண்விழித்த ராஜிபுல் மியா, ஏன் நாயைக் கல்லால் தாக்குகிறீர்கள் என்று முதியவரிடம் கேட்டுள்ளார். ஆனால் எதையும் கண்டுகொள்ளாத முதியவர், தொடர்ந்து நாயைத் தாக்கியுள்ளார்.

சில கற்கள் ராஜ்புல் மியா மீது விழுந்துள்ளது. அதனால் கிருஷ்ணனுக்கும் ராஜ்புல் மியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் கிருஷ்ணனை ராஜ்புல் மியா கல்லால் தாக்கியுள்ளார். உடனே கிருஷ்ணன், டெலிபோன் இணைப்பகத்திலிருந்து வெள்ளாளர் தெரு வரை சாலையில் ஓடியுள்ளார். ஆனால், ராஜ்புல் மியா விடாமல் அவரை விரட்டிச் சென்று கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணன், நடுரோட்டில் விழுந்துள்ளார்.

`26 ஆக உயர்ந்த எண்ணிக்கை; களமிறங்கிய 4 மாவட்ட மருத்துவர்கள்!' - கொரோனா தொற்றால் கலங்கும் கரூர்
ராஜ்புல் மியா
ராஜ்புல் மியா

அப்போதுகூட கிருஷ்ணனை விடாமல் ராஜ்புல் மியா தாக்கியுள்ளார். அதிகாலை நேரம் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக கிருஷ்ணாவின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. கிருஷ்ணாவின் தலையிலும் உடலிலும் கல்லால் தாக்கியதில் ரத்தம் அதிகம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராஜ்புல் மியா சென்றுவிட்டார். சிசிடிவி கேமரா மூலம் ராஜ்புல் மியாவைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.

ராஜ்புல் மியா அளித்த வாக்குமூலத்தில், `` வேலை எதுவும் இல்லாமல் அசாமில் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தேன். அதனால் எனக்கும் என் தம்பிக்கும் தகராறு ஏற்பட்டது. அதனால் வீட்டை விட்டுக் கடந்த மாதம் வெளியேறி ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு வந்தேன். எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகின்றனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

அவர்களிடம் வேலை கேட்கலாம் என அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வந்தேன். ஆனால், வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் பிளாட்பாரத்தில் தங்கியிருந்தேன். அதற்குள் கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் சாப்பிடக் கூட வழியில்லாமல் தவித்தேன். சம்பவத்தன்று இரவு நாயையும் நாய்குட்டியையும் கிருஷ்ணன் கல்லால் தாக்கினார். அதைத் தட்டிக்கேட்டேன். அதனால் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணனைக் கல்லால் தாக்கிக் கொலை செய்தேன்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு