Published:Updated:

`பல நூறு கோடி மதிப்பு; வெளிநாடு கடத்தத் திட்டம்' - தஞ்சாவூரில் 14 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல்

சிலைகள்

தஞ்சாவூரில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானவை, சிலைகளைத் திருடிய குற்றவாளிகள் யார், எப்படி கணபதியின் கைக்கு வந்தன என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

`பல நூறு கோடி மதிப்பு; வெளிநாடு கடத்தத் திட்டம்' - தஞ்சாவூரில் 14 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல்

தஞ்சாவூரில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானவை, சிலைகளைத் திருடிய குற்றவாளிகள் யார், எப்படி கணபதியின் கைக்கு வந்தன என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Published:Updated:
சிலைகள்

தஞ்சாவூரில் சிலைகள் செய்யும் நிறுவனம் ஒன்றில், வெளிநாட்டுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்வதற்காக ரகசிய இடத்தில் பதுக்கிவைக்கப்படிருந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய பழைமையான 14 ஐம்பொன் சாமி சிலைகள், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிறுவனம்
சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிறுவனம்

தஞ்சாவூர் சிவாஜி நகரில் கணபதி என்பவர் பல வருடங்களாக ஆர்ட் வில்லேஜ் என்ற பெயரில் சிலைகள் செய்து, விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவருகிறார். இவர் வெளிநாட்டினரை அழைத்து வந்து சிலைகள் எப்படி செய்யப்படுகின்றன எனச் செயல்முறையில் செய்து காட்டி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் கணபதியின் நிறுவனத்துக்கு அடிக்கடி வெளிநாட்டினர் வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் கணபதி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பழைமையான ஐம்பொன் சிலைகளை விற்பனை செய்வதற்காக பழங்காலச் சிலைகள் வாங்கக்கூடிய சிலைப் பிரியர்களை தேடிவருவதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் 10 போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

சிலைகள்
சிலைகள்

மேலும் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்குக் கடத்திச் செல்வதற்காக பதுக்கிவைத்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கணபதியின் ஆர்ட் வில்லேஜ் நிறுவனத்தைச் சுற்றிவளைத்து சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் கடத்துவதற்காக ரகசிய இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பழைமையான 14 உலோகச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறுகையில், ``கணபதி தன்னுடைய சிலைகள் செய்யும் நிறுவனத்தில் பழைமையான சிலைகளைப் பதுக்கிவைத்திருப்பதாகவும், அவற்றைக் கடத்திச் சென்று வெளிநாட்டில் விற்பனை செய்யவிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய நிறுவனத்தில் சோதனை நடத்தியதுடன் பெருமாள், ரிஷப தேவர், ரிஷபதேவ அம்மன், சிவகாமி அம்மன், அப்பர், சுந்தரர் உள்ளிட்ட 14 சாமி உலோக சிலைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

சிலைகள்
சிலைகள்

சிலைகளுக்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. முறையான விளக்கமும் சொல்லவில்லை. மேலும் 2017-ம் ஆண்டிலேயே இந்தச் சிலைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு இந்திய தொல்லியல்துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார். பழைமையான சிலைகள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதும் தெரியவந்திருக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானவை, சிலைகளைத் திருடிய குற்றவாளிகள் யார், எப்படி கணபதியின் கைக்கு வந்தன என்றும், சிலைகளின் தொன்மை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சர்வதேசச் சந்தையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புகொண்டவை. இது தொடர்பாக கணபதியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது” எனத் தெரிவித்தனர்.