Published:Updated:

கும்பகோணம் டு தென்னாப்பிரிக்கா... கடத்த முயன்ற 6 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல்! - ஒருவர் கைது

சிலைகள்

2015-ம் ஆண்டிலேயே 6 ஐம்பென் சிலைகளையும் ராமலிங்கம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக மத்திய தொல்லியல்துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார். சிலைகள் பழைமையானவையாக இருந்ததால் தொல்லியல்துறையினர் அதை நிராகரித்ததும் தெரியவந்துள்ளது.

கும்பகோணம் டு தென்னாப்பிரிக்கா... கடத்த முயன்ற 6 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல்! - ஒருவர் கைது

2015-ம் ஆண்டிலேயே 6 ஐம்பென் சிலைகளையும் ராமலிங்கம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக மத்திய தொல்லியல்துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார். சிலைகள் பழைமையானவையாக இருந்ததால் தொல்லியல்துறையினர் அதை நிராகரித்ததும் தெரியவந்துள்ளது.

Published:Updated:
சிலைகள்

கும்பகோணம் பகுதியில் தென்னாப்பிரிக்காவுக்குக் கடத்துவதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய பழைமையான, கிருஷ்ணர் உள்ளிட்ட ஆறு ஐம்பொன் சாமி சிலைகளை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்ததுடன், சிலைகளைப் பதுக்கிவைத்திருந்தவரையும் கைதுசெய்துள்ளனர்.

சிலைக் கடத்தல் தடுப்பு போலீஸார் பறிமுதல் செய்த சாமி சிலைகள்
சிலைக் கடத்தல் தடுப்பு போலீஸார் பறிமுதல் செய்த சாமி சிலைகள்

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழிப் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். ஸ்ரீதர்சன் ஆர்ட் மெட்டல்ஸ் என்ற பெயரில் சாமி சிலைகள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்திவருகிறார். ராமலிங்கம் தன் நிறுவனத்தில் பழங்காலச் சாமி சிலைகளைப் பதுக்கிவைத்திருப்பதாகவும், அவற்றைத் தென்னாப்பிரிக்காவுக்குக் கடத்தவிருப்பதாகவும் ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ராமலிங்கம் நிறுவனத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் கிருஷ்ணர், விநாயகர், திருக்கடையூர் நடராஜர், சிவகாமி அம்மன், அர்த்தநாரீஸ்வரர், வல்லப கணபதி உடன் அம்மன் எனப் பழைமையான ஆறு ஐம்பொன் சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து, பறிமுதல் செய்ததுடன் ராமலிங்கத்தையும் கைதுசெய்தனர்.

சிலை
சிலை

இது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறுகையில், `ராமலிங்கம் பழைமையான ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கிவைத்திருப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவருடைய நிறுவனத்தில் சோதனை நடத்தியதுடன், ஆறு சிலைகளைப் பறிமுதல் செய்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில் பல நூறு கோடி மதிப்புடைய அந்த சாமி சிலைகளை தென்னாப்பிரிக்கா நாட்டிலுள்ள சிசோன்கே என்ற தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து விற்பனை செய்யவிருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

ராமலிங்கத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு சர்வதேசச் சந்தைகளில் பல நுாறு கோடி ரூபாய். 2015-ம் ஆண்டிலேயே அந்தச் சிலைகளை ராமலிங்கம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் சிலைகள் பழைமையானவையாக இருந்ததால் தொல்லியல்துறை அதிகாரிகள் அவரின் விண்ணப்பத்தை நிராகரித்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கும்பகோணத்திலிருந்து தென்னாப்பிரிக்கா கடத்த முயன்ற சாமி சிலை
கும்பகோணத்திலிருந்து தென்னாப்பிரிக்கா கடத்த முயன்ற சாமி சிலை

சிலைகள் தொடர்பாக ராமலிங்கத்திமிருந்து சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு மேற்கொண்டதில் சிலைகள் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானவை, அவற்றின் தோற்றம் உள்ளிட்டவை குறித்த தகவல் எதுவும் இல்லை. அந்தச் சிலைகள் ராமலிங்கத்துக்கு எப்படிக் கிடைத்தன, இதில் வேறு யாருக்குத் தொடர்பு இருக்கிறது, யார் மூலமாக தென்னாப்பிரிக்காவுக்குக் கடத்தி விற்பனை செய்ய முயன்றார் என்பது குறித்து விசாரணை தொடர்ந்துவருகிறது” எனத் தெரிவித்தனர்.