Published:Updated:

`தூக்கில் தொங்கியபடி தீக்குளிக்க முடியுமா?' -அதிர்ச்சி கொடுத்த மூதாட்டியின் மரணம்

தற்கொலை
தற்கொலை ( Representational Image )

மூதாட்டி தனலட்சுமி, தூக்குப்போட்டும் தீக்குளித்தும் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சென்னை அண்ணாநகர் கிழக்கு, என்.பிளாக், 27-வது தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (60), இவர் தன்னுடைய மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் இந்த வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு பாத்ரூம் சென்று விட்டு வருவதாகக் கூறி அவரின் அறைக்குச் சென்றுள்ளார் தனலட்சுமி. அதன்பிறகு அவரின் அறையிலிருந்து புகை வந்துள்ளது.

கொரோனா : 4,000-த்தைக் கடந்த பாதிப்பு! - அச்சத்தில் மதுரை மக்கள்

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமியின் உறவினர்கள், அங்கு சென்றனர். அப்போது பாத்ரூம் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. உள்ளே இருந்துதான் புகை வருவதை உறுதிப்படுத்தினர். பின்னர் தனலட்சுமியிடம் கதவைத் திறக்கும்படி சத்தம் போட்டனர். ஆனால், உள்ளே இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. மாறாகத் தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டது.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் தனலட்சுமியின் உடலில் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கரூர் அதிர்ச்சி: `அரசு மருத்துவருக்கு கொரோனா - குடும்பத்தில் ஐந்து பேருக்கும் பாதிப்பு!

இதையடுத்து தனலட்சுமியின் மரணம் குறித்து அண்ணாநகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தனலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனலட்சுமியின் மரணம் குறித்து அவரின் உறவினர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், ``மூதாட்டி தனலட்சுமி, தூக்குப்போட்டும் தீக்குளித்தும் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தூக்கில் தொங்கிய ஒருவர் எப்படி தீக்குளிக்க முடியும் என்று விசாரித்து வருகிறோம்.

தற்கொலை
தற்கொலை

தனலட்சுமி தற்கொலை செய்துகொண்ட பாத்ரூமையும் ஆய்வு செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

மூதாட்டி தனலட்சுமி என்ன காரணத்துக்காக இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. அவரின் இந்த விபரீத முடிவு அண்ணாநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு