Published:Updated:

ராமநாதபுரம்: மூதாட்டி கொலை; நகைக்காகக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய எதிர் வீட்டுப் பெண் கைது!

கைதுசெய்யப்பட்ட சந்தானம்மாள்

வீட்டில் தனியாக வசித்துவந்த மூதாட்டியிடம், நகைகளைத் திருடுவதற்காகத் திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, நல்லவர்போல் நாடகமாடிய எதிர்வீட்டு மூதாட்டியை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

ராமநாதபுரம்: மூதாட்டி கொலை; நகைக்காகக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய எதிர் வீட்டுப் பெண் கைது!

வீட்டில் தனியாக வசித்துவந்த மூதாட்டியிடம், நகைகளைத் திருடுவதற்காகத் திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, நல்லவர்போல் நாடகமாடிய எதிர்வீட்டு மூதாட்டியை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட சந்தானம்மாள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோவிலாங்குளம் அருகேயுள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள் (80). கணவர் இறந்த நிலையில், உறவினர்கள் துணையின்றி தனியாக வசித்துவந்திருக்கிறார். காளியம்மாளுக்கு ஆதரவாகப் பக்கத்து வீட்டில் உள்ள மூதாட்டி சந்தானம்மாள் இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி இரவு காளியம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கிறார்.

இது குறித்து சந்தானம்மாள் கொடுத்த தகவலின் பேரில் கமுதி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த காளியம்மாளின் உறவினர் ஒருவர், காளியம்மாள் அணிந்திருந்த பத்து பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் மூதாட்டி உடலில் எந்தவிதக் காயமும் இல்லை.

கமுதி காவல் நிலையம்
கமுதி காவல் நிலையம்

இது குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீஸுக்குத் தகவல் தெரிவித்த சந்தானம்மாளிடம் துருவித் துருவி விசாரணை செய்தனர். அதில் நகைக்காகக் காளியம்மாளைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து போலீஸார் சந்தானம்மாளைக் கைதுசெய்தனர்.

எப்போதும் காளியம்மாளுடன் இருக்கும் சந்தானம்மாள், அவரைக் கொலை செய்து நகைகளை திருடினால் யாருக்கும் தன் மீது சந்தேகம் வராது என்ற எண்ணத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காளியம்மாளை மூச்சைப்பிடித்து கொலைசெய்ததாகவும், தன்மீது போலீஸுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தானே போலீஸுக்குத் தகவல் தெரிவிப்பதுபோல் தெரிவித்து நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்தது.