Published:Updated:

சமையல் செய்துகொண்டிருந்த மூதாட்டியைக் கொன்று, 5 பவுன் நகை கொள்ளை! - போலீஸார் விசாரணை

கொலை

நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமையல் செய்துகொண்டிருந்த மூதாட்டியைக் கொன்று, 5 பவுன் நகை கொள்ளை! - போலீஸார் விசாரணை

நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published:Updated:
கொலை

திருப்பூர் எஸ்.வி காலனி டி.எஸ்.ஆர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். இவரின் மனைவி சந்திராமணி (67). இவர்களின் மகன் பூவேந்தன். இவர் திருமணமாகி குடும்பத்துடன் திருப்பூர் கே.பி.என்.காலனியில் வசித்து வருகிறார்.

முத்துச்சாமியும், சந்திராமணியும் தனியாக வசித்து வந்தனர். முத்துச்சாமிக்கு ஒரு கால் செயலிழந்ததால் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் சந்திராமணி சமையல் செய்து கொண்டிருந்தார்.

சந்திராமணி
சந்திராமணி

நீண்ட நேரமாகியும் சந்திராமணியின் சத்தம் கேட்காததால், முத்துச்சாமி சமையல் அறைக்குச் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சந்திராமணி இறந்துகிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டார். சந்திராமணியின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.

கொலை நடைபெற்ற வீடு
கொலை நடைபெற்ற வீடு

சந்திராமணியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்ததில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், புதன்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் முத்துச்சாமியின் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.