Published:Updated:

`தற்கொலை போன்ற செட்-அப்!’ - கரூரில் நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை?

சமீபத்தில்தான் இவரது கணவர், அவர்கள் வளர்த்த காளைக்கன்று முட்டி இறக்க, இப்போது அந்த மூதாட்டியை மர்மநபர்கள் கொலைசெய்துவிட்டு, கொள்ளையடித்துவிட்டு போயிருக்கிறார்கள்.

கொலை செய்யப்பட்ட எல்லம்மாள்
கொலை செய்யப்பட்ட எல்லம்மாள் ( நா.ராஜமுருகன் )

கரூர் அருகே 20 லட்சம் மதிப்பிலான பணம், நகையைக் கொள்ளையடித்துவிட்டு, மூதாட்டியைக் கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்கவிட்ட மர்மநபர்களால், கரூர் மாவட்டம் பதட்டத்தில் உள்ளது.

கொலை செய்யப்பட்ட எல்லம்மாள்
கொலை செய்யப்பட்ட எல்லம்மாள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளப்பட்டி அருகே உள்ளது, லிங்கமநாயக்கன்பட்டி. இப்பகுதியில் வசிக்கும் மணி என்பவருக்குச் சொந்தமான குமணன் தோட்டத்தைக் கடந்த 10-வருடங்களுக்கும் மேலாக குத்தகைக்கு எடுத்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தனர், மணி என்பவரும் அவரது மனைவி எல்லம்மாளும்.

Vikatan

அதோடு, ஒரு சிலருக்கு தங்க நகைகளின் பேரில் கடன் உதவியும் செய்துகொண்டு, வட்டிக்கு விடும் தொழிலும் செய்துவந்துள்ளார். இந்நிலையில் இவரது கணவர் மணி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவர்கள் வளர்த்த காளைக்கன்று முட்டியதில், இறந்துபோனார்.

கொலை செய்யப்பட்ட எல்லம்மாள்
கொலை செய்யப்பட்ட எல்லம்மாள்
நா.ராஜமுருகன்

இவர்களுக்கு சிவானந்தன், பாஸ்கர் என்ற 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளியூரில் தங்கி, சொந்தமாகத் தொழில் செய்துவருகின்றனர். ஆனால், கணவர் இறந்த துக்கம் ஒருபக்கம் இருந்தாலும், தைரியமான மூதாட்டியான எல்லம்மாள், லிங்கமநாயக்கன்பட்டியிலேயே தங்கி குத்தகை நிலத்தில் விவசாயம் செய்துவந்துள்ளார். அதோடு, ஐந்து மாடுகளையும் காவலுக்கு ஒரு மூன்று நாய்களையும் வளர்த்துவந்துள்ளார். எல்லம்மாள், தனது வரவு-செலவு தொடர்பாக, நிறைய வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுத்துள்ளார்.

இன்று காலையில் எல்லாம்மாள், அவரது வீட்டில் தூக்கில் தொங்கியதைப் பார்த்த அக்கம்பத்தினர், பதற்றத்துடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். வீட்டை நெருங்கிப் பார்த்த அவர்களுக்கு, எல்லம்மாளின் உடல் நிறுத்தப்பட்டிருந்த கோணம் சந்தேகத்தை வரவழைக்க, உடனே அந்தத் தகவலை அரவக்குறிச்சி காவல்நிலையத்துக்குத் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, எல்லம்மாளை யாரோ மர்ம நபர்கள் கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டுச் சென்றதை யூகித்தனர். வீட்டில் இருந்த பொருள்கள் அலங்கோலமாக சிதறிக் கிடந்ததைப் பார்த்து, தொடர்சோதனையை மேற்கொண்டனர். எல்லாம்மாவைக் கொலைசெய்த மர்ம நபர்கள், தடயத்தை யாரும் அறிந்திராத வகையில், வீடெங்கும் மிளகாய்ப் பொடியைத் தூவி வைத்திருந்தனர். இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அவரது இளைய மகன் பாஸ்கர், உடனே லிங்கமநாயக்கன்பட்டிக்கு வந்தார்.

கொலைசெய்யப்பட்ட எல்லம்மாள்
கொலைசெய்யப்பட்ட எல்லம்மாள்
நா.ராஜமுருகன்

அவர் வந்து வீட்டை சோதனை செய்ததில், 20 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் எல்லம்மாளின் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. எல்லம்மாளை கொலை செய்துவிட்டு, அவரது உடலை தூக்கில் தொங்குவதுபோல் நிறுத்துவைத்திருந்ததும், போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காவல்துறையினர் எல்லம்மாளின் உடலை கைப்பற்றி, கொலைக்கான காரணம், கொலை செய்தது யார் என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சில மாதங்களுக்கு முன், கணவர் மாடு முட்டி இறக்க, தனிமையில் வாழ்ந்துவந்த எல்லம்மாளை நகை, பணத்துக்காக மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.