Published:Updated:

டெல்லி: மல்யுத்த வீரர் கொலை; தலைமறைவான ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமார் சிக்கியது எப்படி?

சுஷில் குமார்
சுஷில் குமார்

கொலையில் முக்கியக் குற்றவாளியான சுஷில் குமாரை போலீஸார் தேடிவர, தலைமறைவானார் சுஷில் குமார்.

மல்யுத்த வீரர் சாகர் ராணா (23) கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான, இரண்டு முறை ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற மல்யுத்த வீர்ர் சுஷில் குமாரை 18 நாள்கள் தொடர் தேடலுக்கு பின் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சுஷில் குமாருக்கு சம்பந்தப்பட்ட வீட்டில், சாகர் அவரது நண்பர்களுடன் வாடகைக்கு வசித்துவந்துள்ளார். ஒருநாள் சுஷில் திடீரென வீட்டைக் காலி செய்யும்படி சொல்ல சாகர் மறுத்ததாகவும், பின்னர் வலுக்கட்டாயமாக சாகரை வீட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சாகர் ஸ்டேடியத்தில் சுஷில் குறித்து அவதூறு பரப்பியதாகச் சொல்லப்படுகிறது. கோபமடைந்த சுஷில் சாகரை தாக்க முனைந்தார். கார் பார்க்கிங்கில் சுஷிலும் அவரது நண்பர்களும், சாகரையும் அவரது நண்பர்கள் இருவரையும் தாக்கினர். பலத்த காயம் பட்ட சாகர் சம்பவம் நடந்த மே-4 அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சுஷில் குமார்
சுஷில் குமார்

கொலையின் முக்கியக் குற்றவாளியான சுஷில் குமாரை போலீசார் தேடிவர, தலைமறைவானார் சுஷில் குமார். கடந்த 18 நாள்களில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநில எல்லைகளைக் கடந்து எந்த இடத்திலும் தங்காமல் தப்பித்துவந்தார். மேலும், சிம் கார்டுகளையும் தொடர்ந்து மாற்றியுள்ளார். குமாரை பற்றித் தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும், அவரது கூட்டாளி அஜய் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50,000-ம் வெகுமதி அறிவித்து உத்தரவிட்டனர் காவல்துறையினர்.

கொலை நடந்த அடுத்த நாள் உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் ஆசிரமம் ஒன்றில் தங்கினார் சுஷில் குமார். பின் டெல்லி வந்தார். மீரட் சுங்கச்சாவடியில் கண்டுபிடிக்கப்பட்ட சுஷில் அங்கிருந்து தப்பி ஹரியானா மாநிலம் பகதூர்கர் சென்றுள்ளார். அங்கிருந்து சண்டிகர் சென்று பஞ்சாப் மாநிலம் பாடிண்டாவுக்குச் சென்றிருக்கிறார். மீண்டும் சண்டிகர் திரும்பி குருகிராமத்தில் தங்கியிருக்கிறார். பின்னர் ஞாயிறு காலை இருசக்கர வாகனத்தில் மேற்கு டெல்லியிலுள்ள முண்ட்காவில் அவரது கூட்டாளி அஜய் உடன் தப்பிச் செல்லும்போது காவலர்களிடம் சிக்கினார்.

கைது
கைது
Representational Image

காவல் துறையிடமிருந்து சுஷிலும் அவரது நண்பரும் தப்பிக்க பப்லூ என்பவர் உதவியிருக்கிறார். ஹரியானா மாநிலம், பகதூர்கரைச் சேர்ந்த பப்லூ பின்னர் குமார் பயன்படுத்திய கார் குறித்த தகவல்களை போலீஸாரிடம் கூறினார். சுஷில் குமாரின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதுடன், கவன ஈர்ப்பு சுற்றறிக்கையும், ஜாமீன் அல்லாத கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு