Published:Updated:

`எங்க மாமா சாவுக்கு நீதான் காரணம்!’-கணவரின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மனைவி

தூத்துக்குடியில் கணவரின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி, பிள்ளையார் பெரியவன்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவர், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணிபுரிந்துவந்தார். இவருக்கு அருணா என்ற மனைவியும் கமலேஷ், அகிலேஷ் என இரண்டு மகன்களும் உள்ளனர். கமலேஷ், சென்னையிலுள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். அகிலேஷ், உள்ளூரிலுள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறார்.

உயிரிழந்த அருணா
உயிரிழந்த அருணா

2020-ம் ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதி குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார் செல்வமுருகன். இதையடுத்து அருணா, தன் இரு மகன்களுடன் பிள்ளையார் பெரியவன்தட்டிலுள்ள வீட்டில் வசித்துவந்தார். இந்தநிலையில், செல்வமுருகன் உயிரிழந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. ஆனால், நினைவுநாள் விசேஷத்துக்கு செல்வமுருகனின் உறவினர்கள் யாரையும் அருணா அழைக்கவில்லையாம்.

நேற்று மாலையில் செல்வமுருகனின் அக்கா ராசம்மாள், அவரின் மகன் முத்துகுமார் ஆகியோர் செல்வமுருகனின் வீட்டுக்கு வந்திருக்கின்றன. `சாமி கும்பிட எங்களுக்கு ஏன் சொல்லலை? முதல் வருஷ விசேஷம் எல்லாருக்கும் சொல்லித்தானே செய்யணும்?’ எனக் கேட்டிருக்கிறார் முத்துக்குமார். அதற்கு அருணா சரியாக பதில் சொல்லவில்லையாம். அப்போது முத்துகுமார், அத்தையிடம் தனியாகப் பேச வேண்டும் எனச் சொல்லி, வீட்டில் இருந்தவர்களை சிறிது நேரம் வெளியே நிற்கச் சொல்லிவிட்டு அருணாவுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

ஆய்வு செய்த போலீஸார்
ஆய்வு செய்த போலீஸார்

அப்போது, `எங்க மாமாவோட சாவுக்கு நீதான் காரணம்’ எனக் கூறி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அவர், கத்தியால் உடலில் சராமரியாகக் குத்தியிருக்கிறார். கத்திக்குத்திலிருந்து தப்பிப்பதற்காக பாத்ரூமுக்குள் ஓடிச் சென்றிருக்கிறார் அருணா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகை மனிஷா கொய்ராலாவின் செயலர் கொலை; துப்பறிய வாட்ச்மேன் வேலை பார்த்த போலீஸ்!

கதவை மூடித் தாழ்பாள் போட முயன்றபோது முத்துக்குமார் பாத்ரூமுக்குள் சென்று அரிவாளால் அவரின் கழுத்தை அறுத்திருக்கிறார். இதில், அருணா ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். அருணாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வரவே, முத்துக்குமார் அங்கிருந்து தப்பியோடினார். அருணாவின் நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்துவந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால்தான் அவர், கடந்த ஆண்டு விஷம் குடித்து உயிரிழந்தார் எனவும் சொல்லப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் அருணா
ரத்த வெள்ளத்தில் அருணா

செல்வமுருகனின் உயிரிழப்புக்குப் பிறகும் அருணா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்பதால், உறவினர்கள் தொடர்ந்து அருணாவைக் கண்டித்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ``அருணாவின் உடலில் 21 இடங்களில் கத்துக்குத்து உள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரைத் தேடிவருகிறோம். விசாரணைக்குப் பிறகே முழுவிவரம் தெரியவரும்” என்கின்றனர் போலீஸார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு