Published:Updated:

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கிய கள்ளத் துப்பாக்கி! -ஆவின் உதவி பொது மேலாளலர் கொடுத்த அதிர்ச்சி

லஞ்சப் புகாரில் கையும் களவுமாக பிடிபட்ட, நிலையில் தற்போது ஆயுத சட்டத்தின் கீழ் சிக்கியிருக்கிறார் சத்துவாச்சேரி ஆவின் அலுவலக உதவி பொதுமேலாளர்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் உதவி பொதுமேலாளராக இருப்பவர் மகேந்திர மாலி. இவர், தினக்கூலிக்கு ஆட்களை சப்ளை செய்த கான்ட்ராக்டருக்கு பில் பாஸ் பண்ண ரூ. 5,000 கேட்டிருக்கிறார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் வர, நவம்பர் 9 -ம் தேதி பொறி வைத்து காத்திருந்தனர். லஞ்சப் பணம் கை மாறும்போது மாலியை பிடித்துவிட்டனர்.

சிக்கிய கள்ளத் துப்பாக்கி
சிக்கிய கள்ளத் துப்பாக்கி

ஆனால், இதன் பின்னர் நடந்ததுதான் திடுக்கிடும் விஷயம். மாலியின் வீட்டில் சோதனை நடத்தியபோது, கள்ளத்துப்பாக்கி ஒன்றும் 6 காட்டேஸுகள், தோட்டாக்கள் இருந்ததை பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிர்ந்தனர். இதுபற்றி மாலியிடம் கேட்டபோது, சரிவர பதில் சொல்லவில்லை. இதை அவர் எங்கே வாங்கினார்? எத்தனை முறை பயன்படுத்தினார்? என்றெல்லாம் அடுத்த கட்ட விசாரணை நடத்தும்படி உள்ளூர் சட்ட ஒழுங்குப்பிரிவு போலீஸாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒப்படைத்துள்ளனர். ஏற்கனவே லஞ்சப் புகாரில் கையும் களவுமாக பிடிபட்ட, நிலையில் தற்போது ஆயுத சட்டத்தின் கீழ் மாலி சிக்கியிருக்கிறார்.

`8 துப்பாக்கி.. 60 தோட்டாக்கள்..!’ கள்ளத் துப்பாக்கி விற்பனையில் சிக்கிய கும்பகோணம் மருத்துவர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு