Published:Updated:

20 பேருக்கு அரிவாள் வெட்டு.. ஒருவர் உயிரிழப்பு! -கமுதி கிராமத்தை கலக்கமடையவைத்த ஆடுகள்

அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவர்
அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவர் ( உ.பாண்டி )

பருத்திச் செடிகளை ஆடுகள் மேய்ந்துள்ளன. இதைக்கண்ட பாண்டியும் அவரின் மகன் ஆனந்தும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்த முனியசாமியைத் தாக்கினர். இதில் முனியசாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

கமுதி அருகே பருத்தி தோட்டத்தில் ஆடு நுழைந்ததால் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தில் பெண்கள் உள்ளிட்ட 20 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக கமுதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு தரப்பு மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்
இரு தரப்பு மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது ஆசூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகன் முனியசாமி ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். மேய்ச்சலின்போது கடும் வெயிலின் தாக்கத்தினால் சோர்வடைந்த முனியசாமி ஓய்வெடுப்பதற்காக அப்பகுதியில் இருந்த மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர்.
போலீஸ்

அந்நேரத்தில் வயல்காட்டுப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் அருகில் இருந்த பாண்டி என்பவரது பருத்திக் காட்டில் புகுந்து பருத்திச் செடிகளை மேய்ந்துள்ளன. இதைக்கண்ட பாண்டியும் அவரின் மகன் ஆனந்தும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்த முனியசாமியைத் தாக்கினர். இதில் முனியசாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதையடுத்து, ரத்தக் காயத்துடன் வந்த முனியசாமியைக் கண்ட அவரது உறவினர்கள் பாண்டியைத் தேடிச் சென்றனர். அங்கு பாண்டி தரப்புக்கும், முனியசாமி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரிவாள், கத்தி, கம்புகளால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பாண்டி தரப்பை சேர்ந்த மாரிச்சாமி, பவுன்ராஜ் உள்ளிட்ட 6 பேரும், முனியசாமி தரப்பைச் சேர்ந்த செல்வராணி, செல்வி, முத்துக்குமார் உள்ளிட்ட 14 பேரும் காயமடைந்தனர்.

வெட்டுக் காயம் அடைந்தவர்
வெட்டுக் காயம் அடைந்தவர்
உ.பாண்டி

இதையடுத்து, காயமடைந்தவர்கள் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பலத்த காயமடைந்த திருமால் என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த திருமால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த கமுதி போலீஸார் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரெங்கும் கொரோனா அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், பருத்திச் செடியை ஆடு மேய்ந்ததால் ஏற்பட்ட மோதலில் பலரும் வெட்டுக் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு