Published:Updated:

`யார் அடுத்த ஸ்ரீதர்?'- அதிகாரப் பகையில் காஞ்சிபுரத்தைப் பதற வைக்கும் அடுத்தடுத்த கொலைகள்!

ஸ்ரீதர்
News
ஸ்ரீதர்

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் இருந்தபோது அப்பகுதியில் உள்ள தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, ரியல் எஸ்டேட் செய்வதாகச் சொல்லி நிலத்தை அபகரிப்பது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

ஸ்ரீதர் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் காஞ்சிபுரத்தில் தொடர் கொலைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே தொடர் பதற்றத்தில் காஞ்சிபுரம் இருந்து வருகிறது. இந்தநிலையில் மீண்டும் இன்று இரண்டு பேர் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளனர். அதில் ஸ்ரீதரின் உறவினர் கருணாகரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்னேஷ் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செய்யாறில் கொலை செய்யப்பட்ட சதீஷ்
செய்யாறில் கொலை செய்யப்பட்ட சதீஷ்

ஸ்ரீதர் ஆதரவாளர்களின் ஒரு பிரிவில் இருக்கும் தணிகா என்பவரின் உறவினர்கள் கருணாகரன் மற்றும் விக்னேஷ். காஞ்சிபுரம் வணிகர் வீதி தெருவில் நிதிநிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இன்று மாலை இருவரும் வழக்கம்போல அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அலுவலகத்தில் நுழைந்து அவர்களை சரமாரியாக வெட்டியது. இதில் காஞ்சிபுரம் ரவுடி மறைந்த ஸ்ரீதரின் உறவினர் கருணாகரன் உயிரிழந்தார். விக்னேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் இருந்தபோது அப்பகுதியில் உள்ள தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, ரியல் எஸ்டேட் செய்வதாகச் சொல்லி நிலத்தை அபகரிப்பது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். 2017-ல் ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரம் சில மாதங்கள் அமைதியாக இருந்தது. ஆனால், ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் ஸ்ரீதர் போல கோலோச்ச வேண்டும் என அவரின் ஆதரவாளர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாவிற்கும், ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் தினேஷ் என்பவருக்கும் பகை ஏற்பட்டது. கடந்த 2017 நவம்பரில் தினேஷ் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தணிகாவின் ஆட்கள் கொலை செய்ய முயற்சி செய்தனர். இதில் தினேஷ் தப்பித்தார். இதையடுத்து தணிகா ஆதரவாளர் வழக்கறிஞர் சிவக்குமார் என்பவரை கடந்த வருடம் சரமாரியாக வெட்டினார்கள். பல மாதங்கள் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.

கருணாகரன்
கருணாகரன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் வழக்கறிஞர் சிவக்குமாரை வெட்டிய நான்கு பேர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ``தணிகா - தினேஷ் தொடர் மோதல் காஞ்சிபுரத்தில் மீண்டும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. காவல்துறையின் மெத்தனமே இந்தத் தொடர் கொலைகளுக்கு முக்கிய காரணம். காஞ்சிபுரம் ஏ.எஸ்.பியாக ஸ்ரீநாதா பணியில் இருந்தபோது ரவுடிகளைக் கட்டுக்குள் வைத்திருந்தார். இதுபோல கடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே ரவுடிகளைக் கட்டுப்படுத்த முடியும்“ என்கிறார்கள் விவரமறிந்த காஞ்சிபுரம்வாசிகள்.