Published:Updated:

மயிலாடுதுறை கோயில் ஐம்பொன் சிலைத் திருட்டு வழக்கு! - 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் கைது

கைதுசெய்யப்பட்ட ரஜினி

கோயில் சிலைத் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த ரஜினியை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைதுசெய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் வரும் 15-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை கோயில் ஐம்பொன் சிலைத் திருட்டு வழக்கு! - 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் கைது

கோயில் சிலைத் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த ரஜினியை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைதுசெய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் வரும் 15-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட ரஜினி

மயிலாடுதுறை அருகே பிரசித்திபெற்ற கோயில் ஒன்றில் ஐம்பொன் சிலை திருடப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுபவரை, ஏழு அண்டுகளுக்குப் பிறகு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிலைத் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரஜினி
சிலைத் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரஜினி

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள புத்தகரம் கிராமத்தில் பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த பழைமையான காமாட்சி அம்மன் உலோகச்சிலை கடந்த 2014-ம் ஆண்டு காணாமல் போனது. இது குறித்து குத்தாலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன சிலையைத் திருடிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்திவந்தனர். ஆனால் சிலை திருடப்பட்டது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு, தமிழக சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிலைத் திருட்டு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட, மயிலாடுதுறை அருகே தாழஞ்சேரியைச் சேர்ந்த ரஜினி (46) தலைமறைவாக இருந்துவந்த நிலையில் அவரை போலீஸார் பல்வேறு இடங்களில் வலைவீசித் தேடிவந்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ரஜினியை சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் கைதுசெய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ரஜினியை வரும் 15-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கைது
கைது

இதையடுத்து ரஜினியை போலீஸார் கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து விசாரணையையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் செய்துவருகின்றனர். பிரசித்திபெற்ற கோயிலின் உலோகச் சிலையை திருடிச் சென்ற வழக்கில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism