Published:Updated:

திருமணம் மீறிய உறவு; கோயிலில் வைத்துக் கொலை! - அதிமுக முன்னாள் எம்எல்ஏ தம்பியைத் தேடும் போலீஸ்!

சமயபுரம் காவல் நிலையம்

இருவரையும் பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், சமயபுரம் கோயில் முடி மண்டபம் அருகே வைத்து சின்னராசுவின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியை இறக்கி கொலைசெய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

திருமணம் மீறிய உறவு; கோயிலில் வைத்துக் கொலை! - அதிமுக முன்னாள் எம்எல்ஏ தம்பியைத் தேடும் போலீஸ்!

இருவரையும் பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், சமயபுரம் கோயில் முடி மண்டபம் அருகே வைத்து சின்னராசுவின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியை இறக்கி கொலைசெய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

Published:Updated:
சமயபுரம் காவல் நிலையம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு (41). ஆட்டோ ஓட்டுநரான சின்னராசு, மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு சுமார் 8 மணியளவில் சின்னராசு தன்னுடைய ஆட்டோவில் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றிருகிறார். அப்போது இருவரையும் பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், சமயபுரம் கோயில் முடி மண்டபம் அருகே வைத்து சின்னராசுவின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியை இறக்கி கொலைசெய்துவிட்டு தப்பியோடியுள்ளார். குத்திக் குத்து வாங்கிய சின்னராசு அலறியபடி ரத்த வெள்ள வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இந்த கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். இதனால் சமயபுரம் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாதிரி படம்
மாதிரி படம்

கொலைச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும், சமயபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சின்னராசுவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், லால்குடி டிஎஸ்பி சீதாராமன், சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். சின்னராசுவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்தது தெரிந்து, அந்தப் பெண்ணின் கணவர் நளராஜா (எ) புல்லட் ராஜா தான் இந்தக் கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதையடுத்து கொலைச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருக்கும் புல்லட் ராஜா மீது வழக்கு பதிவுசெய்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 2016-2021 காலக்கட்டத்தில் எம்.எல்.ஏ-வாக இருந்த அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பரமேஸ்வரியின் தம்பிதான் இந்த புல்லட் ராஜா (எ) நளராஜா என்பது குறிப்பிடத்தக்கது. புல்லட் ராஜா சமீபத்தில் தான் ஒரு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி, குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜாமீன் கிடைக்கவே சிறையிலிருந்து வெளியே வந்திருந்தார். இப்படியான நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த சில நாள்களிலேயே புல்லட் ராஜா இன்னொரு கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.