Published:Updated:

`மாணவனைப் பலிகொண்ட விளையாட்டு!' - தேனி அரசுப்பள்ளி சோகம்

மாணவர்களிடையே நடைபெற்ற விளையாட்டால், ஒரு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்லிநகரம் அரசுப் பள்ளி
அல்லிநகரம் அரசுப் பள்ளி

தேனி மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு மாணவர்களிடையே நடைபெற்ற விளையாட்டால், ஒரு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமால்
திருமால்

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்றுவருகிறார்கள். இங்கு அல்லிநகரம் கம்பர் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் திருமால், அதே அல்லிநகரம் அழகர் சாமி காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சக்திவேல். இருவரும் 12-ம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. வாணியம்பாடி மாணவன் வெளிநாடு தப்பி ஓட்டம்?

இவர்கள் இருவரும் இன்று பிற்பகல், மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளனர்.

திருமால்
திருமால்

வகுப்பறைக்குச் சென்ற இருவரும், ஒருவரை ஒருவர் விளையாட்டாக அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த விளையாட்டு ஒரு கட்டத்தில் சண்டையாக மாறி, ஒருவரை ஒருவர் கீழே தள்ளி கழுத்தை நெரித்துக்கொண்டனர்.

அப்போது, திருமாலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சம்ப இடத்திலேயே மயங்கிவிட்டார். உடனே, அருகில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி, ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். திருமாலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

அல்லிநகரம் அரசுப் பள்ளி
அல்லிநகரம் அரசுப் பள்ளி
மனிதன் - யானை மோதலுக்குத் தீர்வு கண்டுபிடித்த 9-ம் வகுப்பு மாணவன்! #CelebrateElephants

சம்பவம் அறிந்து பள்ளிக்கு வந்த திருமாலின் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். சக்திவேலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியவர்கள், பெரியகுளம் - தேனி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில், மாணவர் சக்திவேலை, அல்லிநகரம் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அல்லிநகரம் அரசுப் பள்ளி
அல்லிநகரம் அரசுப் பள்ளி

இது தொடர்பாக அல்லிநகரம் காவல்நிலையத்தில் விசாரித்த போது, ``இருவரும் நல்ல நண்பர்கள். விளையாட்டாக வகுப்பறைக்குள் ஓடிக்கொண்டும், அடித்துக்கொண்டும் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் பலமாக அடித்துக்கொண்டு கீழே விழுந்து, உருண்டு சண்டை போட்டுள்ளனர். இதை மாணவர்கள் சிலர் அருகிலிருந்து பார்த்துள்ளனர். விளையாட்டாக செய்கின்றனர் என நினைத்து அவர்களும் அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும், ஒருவரை ஒருவர் கழுத்தை நெறித்துக்கொண்டதில், திருமாலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கிவிட்டார். விளையாட்டாக செய்தது வினையாக முடிந்துவிட்டது'' என்றனர்.