Published:Updated:

`10 நாள்களுக்கு முன்புதான் வந்தார்கள்!' -தூத்துக்குடியில் 17 ட்ரம்களில் சிக்கிய 1 டன் கடல் அட்டைகள்

கடல் அட்டை
News
கடல் அட்டை

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதப்படுத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இரு வடமாநிலத்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியக் கடல்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட கடல் பூங்காவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கவும் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் அட்டையைச் சட்டவிரோதமாகப் பிடித்து உயிருடனும் பதப்படுத்தியும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை
பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகளில்தான் இவை அதிகமாகப் பிடிக்கப்படுகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி அருகிலுள்ள டேவிஸ்புரம் பகுதியில் உள்ள ஒரு மீன் பதப்படுத்துதல் குடோனில் சட்டவிரோதமாகக் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தனிப்படை போலீஸாரும், தாளமுத்துநகர் காவல்நிலைய போலீஸாரும் இணைந்து சோதனை நடத்தினர். டேவிஸ்புரம் பகுதியில் மைதீன், மீரா ஷா ஆகியோருக்குச் சொந்தமான பதப்படுத்துதல் கிட்டங்கியில், தனிப்படையினர் சோதனை செய்தனர். அதில், சுமார் ஒரு டன் கடல் அட்டைகள் சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டங்கியின் உரிமையாளர்கள் மைதீன், மீரா ஷா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

பதப்படுத்தப்பட்ட வெள்ளை, கறுப்புநூல் கடல் அட்டை
பதப்படுத்தப்பட்ட வெள்ளை, கறுப்புநூல் கடல் அட்டை

குடோனில் கடல் அட்டை பதப்படுத்துதல் பணியில் ஈடுபட்டிருந்த இருவரும் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சைலேந்திரகுமார், பிரேம்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. குடோனில் 17 பிளாஸ்டிக் டிரம்களில் பதப்படுத்துவதற்காகக் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே குடோனில் மற்றொரு பகுதியில், சாக்குப் பைகள் விரிக்கப்பட்டு அதில் பதப்படுத்தப்பட்டு உலர வைக்கப்பட்டிருந்த சீனி வெள்ளை நூல் அட்டை 500 கிலோவும் கறுப்பு நூல் அட்டை 200 கிலோவும் வெள்ளை நூல் அட்டை 250 கிலோவும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

``கான்பூரைச் சேர்ந்த இரண்டு பேரையும் கடந்த 10 நாள்களுக்கு முன்புதான், மீன் பதப்படுத்துதல் தொழிலுக்காக ஆட்கள் தேவை என அழைத்து வரப்பட்டு, கடல் அட்டைகளைப் பதப்படுத்தி இலங்கைக்குக் கடத்தும் பணியில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட வடமாநிலத்தவர்கள்
கைது செய்யப்பட்ட வடமாநிலத்தவர்கள்

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மொத்த எடை சுமார் 1 டன் இருக்கும். இதன் மதிப்பு ரூ.20 லட்சமாகும். இந்தக் கடல் அட்டைகளை தூத்துக்குடியிலிருந்து கடல்வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகவே பதுக்கி வைத்துள்ளார்கள்” என்றனர் போலீஸார்.

இதைத்தொடர்ந்து பதப்படுத்துதல் பணியில் ஈடுபட்ட சைலேந்திர குமார், பிரேம் குமார் மற்றும் கயத்தார் பகுதியைச் சேர்ந்த கண்ணன் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். இதில், கண்ணன் மீது கடல் அட்டை கடத்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கருப்புநூல் கடல் அட்டை
கருப்புநூல் கடல் அட்டை

கைது செய்யப்பட்ட மூவரையும், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளையும் போலீஸார், மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், கிட்டங்கியின் உரிமையாளர்களான மைதீன், மீரா ஷா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.