நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேந்தவர் சூரி ஸ்டீஃபன் (54). மத போதகரான இவர், பலருடைய வீடுகளுக்குச் சென்று பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்திவந்தார். இந்த நிலையில், நீலகிரியைச் சேர்ந்த ஒருவரது வீட்டுக்குப் பிரார்த்தனை செய்வதற்காகச் சென்றபோது, அந்த வீட்டில் தனிமையிலிருந்த சிறுமியிடம் சூரி ஸ்டீஃபன் தகாத முறையில் நடந்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தச் சிறுமியின் தாயார் ஊட்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மதபோதகர் சூரி ஸ்டீஃபனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது. அதையடுத்து, மத போதகரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவலர் ஒருவர், ``மதபோதகர் சூரிய மூர்த்தி என்கிற சூரி ஸ்டீஃபன் (54),13 வயது சிறுமியிடம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து சிறுமியின் தாயார் மகளிர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாதிரியாரைக் கைதுசெய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். பிப்ரவரி 3-ம் தேதிவரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்" என்றார்.