Published:Updated:

ஊட்டி: உடைக்கப்பட்ட பூட்டுகள்.. மாயமான லேப்டாப்கள்! - ஹாஸ்டல் மாணவர்கள் அதிர்ச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதி
ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதி

பொது முடக்கம் காரணமாக ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதி கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு மாணவர்கள் வைத்துச் சென்ற லேப்டாப்கள், சான்றிதழ்கள் காணாமல் போயிருக்கும் சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, பள்ளி கல்லூரிகள் அவசரகதியில் மூடப்பட்டன.

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டுமன்றி சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும் விடுதிகளில் தங்கிப் பயின்றுவருகின்றனர்.

:உடைக்கப்பட்ட ஹாஸ்டல் கதவுகள்
:உடைக்கப்பட்ட ஹாஸ்டல் கதவுகள்

இவர்களுக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி ஆகியவை செயல்பட்டுவருகின்றன. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் மாணவ மாணவிகள் உடனடியாக விடுதிகளை காலி செய்யுமாறு வார்டன்கள் அறிவுறுத்தினர்.

இதனால் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், தங்களது உடைமைகளை பாதுகாப்பாக தங்களது அறைகளில் பூட்டிவிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

:உடைக்கப்பட்ட ஹாஸ்டல் கதவுகள்
:உடைக்கப்பட்ட ஹாஸ்டல் கதவுகள்

தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளை அளித்துவரும் நிலையில், லேப்டாப், சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்ல மாணவர்கள் சிலர் வந்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது தங்கும் விடுதி அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, அறையிலிருந்த இவர்களின் உடைமைகளும் களவுபோனதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். மேலும், தங்கும் விடுதித் தரப்பிலிருந்தும் அலட்சியமான பதிலே வந்திருக்கிறது.

வனவிலங்கு உயிரியல் பிரிவு மாணவர்கள்
வனவிலங்கு உயிரியல் பிரிவு மாணவர்கள்

இது குறித்து நம்மிடம் பேசிய முதுகலை வனவிலங்கு உயிரியல் பிரிவு மாணவர் மணிகண்டன், ``லாக்டௌன் சமயத்துல அவசரமா கெளம்பச் சொன்னாங்க. அதனால எங்களால எந்தப் பொருளையும் எடுத்துட்டுப் போக முடியலை. ஐந்து மாசத்துக்கு அப்புறம் இப்போதான் இ-பாஸ் வாங்கிட்டு, ஹாஸ்டலுக்கு வந்து பார்த்தோம். ரூமெல்லாம் திறந்து கெடக்குது. பல பொருள்களைக் காணலை‌. என்னோட ஒரிஜினல் சர்ட்ஃபிகேட், லேப்டாப் எல்லாமே காணாமல் போயிடுச்சு. வார்டன கேட்டா எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. என்ன பண்றதுன்னே தெரியலை. என்னோட ஃப்ரெண்ட் முருகனோட பொருள்களையும் எடுத்துருக்காங்க" எனப் புலம்புகிறார்.

இது குறித்து ஹாஸ்டல் தரப்பில், ``பசங்களோட பொருள்கள் காணாமல்போனது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. கொரோனா வார்டா மாத்தப்போறோம்ணு நகராட்சி ஆளுங்கதான் வந்தாங்க. அதுக்கு நாங்க பொறுப்பு இல்லை’’ என்கிறார்கள்.

ஹாஸ்டல்
ஹாஸ்டல்

இது குறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதியிடம் பேசினோம். ``இப்படி ஒரு விஷயமே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. என்னுடைய கவனத்துக்கு வரட்டும். அதன் பிறகு விசாரிக்கிறேன்" என்றார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகாரளித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு