Published:Updated:

தேங்கிக்கிடந்த மழைநீரை பயணிகள் மீது தெரிக்கவிட்டதாக அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய நபர்கள்!

போக்குவரத்து ஊழியர்கள்

ரோட்டில் தேங்கிக் கிடந்த மழைநீரை பயணிகள் மீது தெறிக்கவிட்டதாக ஊட்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநரை கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேங்கிக்கிடந்த மழைநீரை பயணிகள் மீது தெரிக்கவிட்டதாக அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய நபர்கள்!

ரோட்டில் தேங்கிக் கிடந்த மழைநீரை பயணிகள் மீது தெறிக்கவிட்டதாக ஊட்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநரை கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
போக்குவரத்து ஊழியர்கள்

நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஊட்டி காந்தல் பகுதியிலிருந்து அரசுப் பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஊட்டி மார்கெட் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டிருக்கிறார் அரசுப் பேருந்து ஓட்டுநர் மூர்த்தி. பேருந்தை மீண்டும் காந்தல் நோக்கி இயக்க தயாராகியிருக்கிறார். பேருந்தை இயக்கும்போது சாலையில் தேங்கியிருந்த மழைநீர், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் சிலர் மீது தெறித்திருக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த காந்தல் பகுதியைச் சேர்ந்த இருவர், ஓட்டுநர் மூர்த்தியை ஆபாச வார்த்தைகளில் திட்டி, கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள்
போக்குவரத்து ஊழியர்கள்

மேலும், கற்களைக் கொண்டு ஓட்டுநரின் முகம், மார்பு ஆகிய பகுதிகளில் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இதில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார். அதையடுத்து அருகிலிருந்தவர்கள், அந்த இரண்டு நபர்களிடமிருந்து ஓட்டுநர் மூர்த்தியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். அரசுப் பேருந்து ஓட்டுநரை கண்மூடித்தனமாக தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊட்டி நகரப் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய போக்குவரத்து ஊழியர்கள், ``ஓட்டுநரைத் தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யக் கோரி போலீஸாரிடம் புகார் அளித்தோம். நேற்று இரவு வரை சம்பந்தப்பட்ட நபர்களைக் கைதுசெய்யவில்லை.

போக்குவரத்து ஊழியர்கள்
போக்குவரத்து ஊழியர்கள்

தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பஸ்களை இயக்கப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டோம்‌. போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, மாலைக்குள் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பேருந்தை இயக்கினோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism