Published:Updated:

திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; அளவுக்கு அதிகமாக உணவு, மது கொடுத்து குழந்தையைக் கொன்ற கொடூர தாய்!

குழந்தை கொலை; தாய் கைது

ஊட்டியில் திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக ஒரு வயது ஆண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸார் கைதுசெய்தனர்.

திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; அளவுக்கு அதிகமாக உணவு, மது கொடுத்து குழந்தையைக் கொன்ற கொடூர தாய்!

ஊட்டியில் திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக ஒரு வயது ஆண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
குழந்தை கொலை; தாய் கைது

நீலகிரி மாவட்டம், ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கீதா (38). இவர் கணவர் கார்த்திக் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். கீதா-கார்த்திக் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்துள்ளனர். 3 வயது ஆண் குழந்தை தந்தை கார்த்தியின் பராமரிப்பலும், ஒரு வயது ஆண் குழந்தை தாய் கீதாவின் பராமரிப்பிலும் வளர்ந்து வந்தனர்.

கொலை
கொலை
சித்தரிப்புப் படம்

இந்த நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி தன் இரண்டாவது குழந்தை திடீரென மயங்கி விழுந்தாக தாய் கீதா ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அது உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, குழந்தை இறப்பில் சந்தேகம் எழுந்ததால், மர்ம மரணம் என வழக்கு பதிவுசெய்து ஊட்டி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். குழந்தை உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கத்தில், கூறாய்வுக்காக உடலை கோவைக்கு அனுப்பிவைத்தனர். கூறாய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் குழந்தையை, தாய் கீதா கொலைசெய்திருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளைக் கண்டு காவல்துறையினரே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தாயே குழந்தையைக் கொலைசெய்த அதிர்ச்சி நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய ஊட்டி காவல்துறை அதிகாரி ஒருவர், ``கீதாவுக்கு ஏற்கெனவே இரு நண்பர்களுடன் திருமணம் நடந்திருக்கிறது. ஒருவருடன் முறைப்படி திருமணம் செய்யாமல் வாழ்ந்துவந்திருக்கிறார். மூன்றாவதாக கார்த்திக்குடன் இன்ஸ்டாகிராம் மூலம் கீதாவுக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துள்ளனர். பின்னர் கார்த்திக்கைவிட்டுப் பிரிந்த கீதா, ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஊட்டியில் வாழ்ந்துவந்தார். அப்போது மேலும் சிலருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதனால் குழந்தையைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பெற்ற குழந்தை மீதே ஒருகட்டத்தில் இவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.

கீதா
கீதா

அதனால், கீதா குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக வாயில் உணவைத் திணித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தியிருக்கிறார். கூடவே மதுபானமும் கொடுத்திருக்கிறார். குழந்தையைத் தொட்டிலில் போட்டு வேண்டுமென்றே சுவறில் தலையை மோதச் செய்திருக்கிறார். இதனாலேயே அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. கீதாமீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தோம்" என பதைபதைப்புடன் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism