Published:Updated:

பாஜக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு... கான்பூரில் வெடித்த வன்முறை; கல், வெடிகுண்டுவீச்சால் பதற்றம்!

கான்பூரில் வன்முறை

தொலைக்காட்சி விவாதத்தின்போது பாஜக பிரமுகர் ஒருவர் மொகமது நபிக்கு எதிராகத் தெரிவித்த கருத்தால் கான்பூரில் வன்முறை வெடித்தது. வெடிகுண்டு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல் நடந்ததால் பதற்றம்.

பாஜக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு... கான்பூரில் வெடித்த வன்முறை; கல், வெடிகுண்டுவீச்சால் பதற்றம்!

தொலைக்காட்சி விவாதத்தின்போது பாஜக பிரமுகர் ஒருவர் மொகமது நபிக்கு எதிராகத் தெரிவித்த கருத்தால் கான்பூரில் வன்முறை வெடித்தது. வெடிகுண்டு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல் நடந்ததால் பதற்றம்.

Published:Updated:
கான்பூரில் வன்முறை

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது முகமது நபிக்கு எதிராகத் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக நுபுர் சர்மாவுக்கு எதிராக மகாராஷ்டிராவில் இரண்டு வழக்குகள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பாஜக பிரமுகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சிறுபான்மைச் சமுதாயத்தினர் நகரின் முக்கியமான பராதே மார்க்கெட்டில் கடைகளை மூடும்படி கேட்டுக்கொண்டனர்.

இதற்கு மற்றொரு தரப்பினர் கடையை மூட எதிர்ப்பு தெரிவித்தனர். பராதே மார்க்கெட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் கல்வீச்சாக மாறியது. இரு பிரிவினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. போலீஸார் கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். அதோடு கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கான்பூர் போலீஸ் கமிஷனர் விஜய் சிங் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கை காக்கவும், மேற்கொண்டு வன்முறை ஏற்படாமல் இருக்கவும் ஆயுதம் தாங்கிய 12 கம்பெனி சிறப்புப் படை போலீஸார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக போலீஸார் 36 பேரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் சொத்துகள் முடக்கப்பட்டு புல்டோசர் மூலம் அவை இடிக்கப்படும் என்று விஜய் சிங் தெரிவித்தார். மொத்தம் ஆயிரம் பேர் மீது மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவர்களில் 40 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டு முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். முகமது நபிக்கு எதிராகக் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவைக் கைதுசெய்து சட்டம்- ஒழுங்கை நிறைவேற்ற வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism