Published:Updated:

கேரளா: ஆயுதங்களுடன் பேரணி... 200-க்கும் மேற்பட்ட துர்கா வாஹினி உறுப்பினர்கள்மீது வழக்கு பதிவு!

போலீஸ்

அணிவகுப்பில் துர்கா வாஹினியின் 200-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத ஆர்வலர்கள் ஆயுதங்களுடன் கலந்துகொண்டதாக காவல்துறைத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளா: ஆயுதங்களுடன் பேரணி... 200-க்கும் மேற்பட்ட துர்கா வாஹினி உறுப்பினர்கள்மீது வழக்கு பதிவு!

அணிவகுப்பில் துர்கா வாஹினியின் 200-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத ஆர்வலர்கள் ஆயுதங்களுடன் கலந்துகொண்டதாக காவல்துறைத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
போலீஸ்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கீழரூரில், கடந்த 22-ம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மகளிரணியின் `துர்கா வாஹினி' அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் துர்கா வாஹினியின் 200-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத ஆர்வலர்கள் ஆயுதங்களுடன் கலந்துகொண்டதாக காவல்துறைத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கேரள காவல்துறை உயரதிகாரிகள், ``விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் பிரிவான துர்கா வாஹினி அமைப்பினர் கடந்த மே 22 அன்று ஆயுதங்களுடன் அணிவகுப்பு நடத்தியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவிவந்தது.

துர்ஹ வாஹினி அணிவகுப்பு
துர்ஹ வாஹினி அணிவகுப்பு
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆயுதப் பயிற்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறது. எனவே, நெய்யாற்றின் கரை அருகே உள்ள கிராமத்தில் நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பின் ஏற்பாட்டாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர். ஆனால், நாங்கள் அதற்கு முன்னதாகவே தானாகவே முன்வந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம். ஆயுதம் ஏந்தி அணிவகுப்பில் கலந்துகொண்ட அடையாளம் தெரியாத 200 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துர்கா வாஹினி அணிவகுப்பு
துர்கா வாஹினி அணிவகுப்பு
ட்விட்டர்

மேலும், அவர்கள்மீது 143,144, 147, 149, 153 ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism