Published:Updated:

சென்னை: `அறை முழுவதும் ரத்தம்; பூட்டிய வீட்டுக்குள் பெயின்ட்டர் கொலை!' - சிக்கிய நண்பர்

கொலை வழக்கில் கைதான பஷீர்
கொலை வழக்கில் கைதான பஷீர்

சென்னையில் பெயின்ட்டரின் தொண்டையில் கத்தியால் குத்திவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு நண்பர் தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்டுக்குள்ளேயே அந்த பெயின்ட்டர் உயிரிழந்தார்.

சென்னை, எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் தீபக் என்கிற பஷீர் ( 28). இவர் பெயின்ட்டராக வேலை பார்த்துவந்தார். இவர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த்திருக்கிறார். அவரை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்காக தீபக் மதம் மாறியதோடு, தன்னுடைய பெயரை `பஷீர்’ என்று மாற்றிக்கொண்டார். பஷீரும் அதே பகுதியைச் சேர்ந்த சைமனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் வேலையில்லாத நாள்களில் ஒன்றாக மது அருந்துவார்கள்.

கொலை
கொலை
Representational Image

நேற்று மதியம் எம்.எம்.டி.ஏ காலனி, திருப்பூர் குமரன் தெருவிலுள்ள பஷீரின் மாமனார் வீட்டில் யாரும் இல்லை. அதனால் அங்கு சென்ற பஷீரும் சைமனும் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருவரும் பேசினர். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறியதும், இருவரும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கியிருக்கிறார்கள்.

இதில் ஆத்திரமடைந்த பஷீர், தன்னுடைய நண்பன் சைமனின் தொண்டையில் காய்கறிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தியால் குத்தியிருக்கிறார். ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் சைமன் மயங்கியிருக்கிறார். அதைப் பார்த்த பஷீர் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், சைமனை வீட்டுக்குள்ளேயேவைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் நேற்று மதியம் நடந்திருக்கிறது. பின்னர், பஷீரின் மாமனார் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் தன்னிடமுள்ள சாவியைக்கொண்டு வீட்டைத் திறந்திருக்கிறார். அப்போது அறை முழுவதும் ரத்தமாகக் காட்சியளித்தது. சைமன் இறந்து கிடப்பதைப் பார்த்த பஷீரின் மாமனார் அதிர்ச்சியடைந்தார்.

சென்னை: `மூன்று கொலைகள்; 51 வழக்குகள்' - ரௌடி சங்கர் என்கவுன்ட்டர் பின்னணி
கொலை
கொலை
Representational Image

பின்னர் இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் பஷீரின் மாமனார் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சைமனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பஷீரின் மாமனாரிடம் போலீஸார் விசாரித்தபோது வீட்டுச் சாவி தன் மருமகன் பஷீர், மகள் ஆகியோரிடம் இருக்கிறது என்று கூறினார். இதையடுத்து பஷீரை போலீஸார் தேடியபோது அவர் தலைமறைவாகியிருந்தார். அதனால் அவர்மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து போலீஸார் பஷீரைப் பிடித்து விசாரித்தபோது சைமனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதனால், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீஸார். இந்தச் சம்பவம் அரும்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு