Published:Updated:

மனைவிக்குப் பாலியல் துன்புறுத்தல் - காவலரைக் கடத்தி மூக்கு, காது, உதட்டில் வெட்டிய பாகிஸ்தான் இளைஞர்

காவலரைக் கடத்திய இளைஞர்

தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொலைத் திட்டத்தைத் தீட்டியவர், காவலர் காசிம் பணி முடிந்து வீடு திரும்பும்போது அவரைக் கடத்தி ஜாங் மாவட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார்.

மனைவிக்குப் பாலியல் துன்புறுத்தல் - காவலரைக் கடத்தி மூக்கு, காது, உதட்டில் வெட்டிய பாகிஸ்தான் இளைஞர்

தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொலைத் திட்டத்தைத் தீட்டியவர், காவலர் காசிம் பணி முடிந்து வீடு திரும்பும்போது அவரைக் கடத்தி ஜாங் மாவட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார்.

Published:Updated:
காவலரைக் கடத்திய இளைஞர்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் முகமது இப்திகார். இவர் அதே பஞ்சாப் மாகாணத்தில் காவலராகப் பணிபுரிந்துவரும் காசிம் ஹயாத் என்பவர் தன் மனைவியுடன் தகாத உறவில் இருப்பதாகச் சந்தேகமடைந்திருக்கிறார். இது தொடர்பாக அண்மையில் அவர் காவல் நிலையத்தில், ``காவலர் காசிம் என் மனைவியைத் தகாத உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தியிருக்கிறார். மேலும், அவரின் இச்சைக்கு இணங்கவில்லையென்றால், `உன் மகனைக் கொன்றுவிடுவேன்' என்றும் என் மனைவியை மிரட்டியிருக்கிறார். என் மனைவியுடன் ஆபாசமாக இருந்து அதை வீடியோ பதிவு செய்துகொண்டு தொடர்ந்து மிரட்டிவருகிறார். எனவே, காவலர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என காசிம்மீது புகாரளித்திருந்தார்.

போலீஸ்
போலீஸ்

போலீஸார் அவர் புகார் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ஆத்திரம் தணியாத முகமது இப்திகார், காவலர் காசிமை தீர்த்துக்கட்ட முடிவுசெய்திருக்கிறார். அதன்படி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொலைத் திட்டத்தைத் தீட்டியவர், காசிம் பணி முடிந்து வீடு திரும்பியபோது அவரைக் கடத்தி ஜாங் மாவட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்ரைம்
க்ரைம்

பின்னர் தன்னுடைய 12 நண்பர்களுடன் சேர்ந்து காவலர் காசிமின் உடல் உறுப்புகளைக் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி அவரைச் சித்ரவதை செய்திருக்கிறார். முகமதும், அவர் நண்பர்களும் காவலர் காசிமின் மூக்கு, காதுகள், உதடு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூர தாக்குதலில் காசிம் வலியால் துடிக்க, அக்கம் பக்கத்தினர் கூடிவிடுவார்களோ என பயந்துபோன 13 பேரும் அங்கிருந்து தப்பியிருக்கின்றனர். பின்னர் ஊர்மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த காசிமை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக இருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கும் காவல்துறையினர் முகமது இப்திகார் மற்றும் அவர் நண்பர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

செய்தி (மாணவப் பத்திரிகையாளர்) - மணிகண்டன்.அ