Published:Updated:

பஞ்சாப் கேங்-வார்... பாகிஸ்தான், இந்தியா இடையே போதைப்பொருள், ஆயுதங்களுடன் பயணிக்கும் டிரோன்கள்!

சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அடிக்கடி போதைப்பொருள், ஆயுதங்களுடன் டிரோன்கள் வருவது வாடிக்கையாக நடந்துவருகிறது.

பஞ்சாப் கேங்-வார்... பாகிஸ்தான், இந்தியா இடையே போதைப்பொருள், ஆயுதங்களுடன் பயணிக்கும் டிரோன்கள்!

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அடிக்கடி போதைப்பொருள், ஆயுதங்களுடன் டிரோன்கள் வருவது வாடிக்கையாக நடந்துவருகிறது.

Published:Updated:
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்

பஞ்சாப்பில் சமீபகாலமாக கேங்-வார் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பாடகர் சித்து மூஸ் வாலா பட்டப்பகலில் தானியங்கித் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பஞ்சாப் கேங்குகளுக்கு எப்படி இந்த அளவுக்கு நவீன துப்பாக்கிகள் கிடைக்கின்றன என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. பஞ்சாப்பில் துப்பாக்கி கலாசாரம் அதிகமாக இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறது. இதனால் பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப்புக்குப் பொருள்கள் கடத்திவரப்படுவது சர்வ சாதாரணமாக நடந்துவந்தது. ஆனால் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதால் எல்லை வழியாக, சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்களைக் கடத்த முடிவதில்லை. இதையடுத்து தற்போது கடத்தல்காரர்கள் புதிய வழியில் பொருள்களைக் கடத்தத் தொடங்கியிருக்கின்றனர். பஞ்சாப்பில் இருக்கும் மாஃபியாக்கள், ரெளடிகள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்கள், போதைப்பொருள்களை பாகிஸ்தானிலிருந்துதான் கொண்டுவருகின்றனர். இதற்கு அவர்கள் தேர்வு செய்துள்ள வழி டிரோன்கள். பஞ்சாப்பின் கிராமங்களிலிருந்து பாகிஸ்தானுக்குள் டிரோன்களை கடத்தல்காரர்கள் அனுப்பிவைக்கின்றனர்.

டிரோன்
டிரோன்

பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருள்களை ஏற்றிக்கொண்டு டிரோன்கள் மீண்டும் பஞ்சாப்புக்குள் பயணிக்கின்றன. பஸ் சர்வீஸ் போன்று டிரோன்கள் பாகிஸ்தானுக்கும், பஞ்சாப்புக்கும் இடையே தீவிரவாதிகள், கடத்தல்காரர்களால் இயக்கப்பட்டுவருகின்றன. அதைச் சமீபத்தில் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரோன் ஒன்று பஞ்சாப்புக்குள் நுழைந்தபோது பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். அதே போன்று கடந்த ஜனவரி 9-ம் தேதி மற்றொரு டிரோன் பாகிஸ்தானிலிருந்து 70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களுடன் இந்தியாவுக்குள் நுழைந்தபோது உள்ளூர் போலீஸாரின் துணையோடு எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த இரு டிரோன்களின் வழித்தடத்தையும் ஆய்வு செய்தபோது அவை பெரும்பாலும் பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப்புக்கு மட்டுமே வந்து சென்றது தெரியவந்தது. பஞ்சாப்பின் அமிர்தசரஸ், தரன் தார் போன்ற பகுதியிலுள்ள கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு வந்து பொருள்களை டெலிவரி செய்திருக்கிறது. அதோடு டிரோன்களை முழுமையாக ஆய்வு செய்தபோது அவை இந்தியாவிலிருந்துதான் முதலில் அனுப்பப்பட்டிருந்ததும், பாகிஸ்தானிலிருந்து பொருள்கள் மட்டுமே ஏற்றி வந்திருந்ததும் தெரியவந்தது. பாகிஸ்தான் தரப்பில் சொந்தமாக டிரோன்கள் அனுப்பப்படவில்லை. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு டிரோன்களை அனுப்பியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த டிரோன் கலாசாரம் பாதுகாப்புப் படையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு சவாலாக அமைந்துள்ளது. இது குறித்து கடந்த மாதம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

டிரோன்
டிரோன்
மாதிரிப் படம்

இது குறித்து பஞ்சாப் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பஞ்சாப்பில் சிலர் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு தொடர்புவைத்திருக்கின்றனர். அவர்கள், பஞ்சாப்பில் உள்ள உள்ளூர் கிரிமினல்களுக்குத் தேவையான ஆயுதங்களை பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் இறக்குமதி செய்து கொடுக்கின்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆயுதங்களை விற்பனை செய்ய பஞ்சாப்பில் மிகப்பெரிய நெட்வொர்க் வைத்திருக்கின்றனர். உள்ளூர் கிரிமினல்கள், கிராம இளைஞர்களையும் இதற்குப் பயன்படுத்துகின்றனர்” என்று தெரிவித்தார். டிரோன்களைக் கட்டுப்படுத்த எல்லையில் டிரோன் தடுப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு எல்லையில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மத்திய அரசு சமீபத்தில் டிரோன்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இதனால் டிரோன்களை கிரிமினல்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism